சிவகார்த்திகேயனின் ‘லக்கி சார்ம்’! SK மனைவி ஆர்த்தி பற்றிய சீக்ரெட்ஸ்!
Sivakarthikeyan wife Aarthi : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் சிவகார்த்திகேயன் பற்றி அனைவருக்கும் தெரியும்... ஆனால் அவரின் மனைவி ஆர்த்தி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றி பார்க்கலாம்.
Sivakarthikeyan, Aarthi Marriage Photo
கோலிவுட்டின் பிரின்ஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பார் என்பதைப் போல் சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு பின்னணியில் அவரது மனைவி ஆர்த்தி இருக்கிறார்.
sivakarthikeyan Wife Aarthi
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே திருமணம் செய்துகொண்டார். ஆர்த்தி வேறுயாருமில்லை... சிவகார்த்திகேயனின் சொந்த மாமா பொண்ணு தான். சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் இறந்த பின்னர் அவர் குடும்பத்தை அவரது மாமா தான் கவனித்து வந்தாராம். அதனாலேயே அவரின் மகளை எஸ்.கே.வுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார்கள்.
Aarthi sivakarthikeyan
ஆர்த்தியை திருமணம் செய்த பின்னர் தான் சிவகார்த்திகேயனின் கெரியர் அசுர வளர்ச்சி அடைந்தது. திருமணத்துக்கு முன்பு வரை சின்னத்திரையிலேயே காலத்தை ஓட்டி வந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரை நோக்கி நகர்த்திவிட்டதில் அவரின் மனைவி ஆர்த்தியின் பங்கு அதிகம் உள்ளதாம். ஆர்த்தி தன் லக்கி சார்ம் என சிவாவே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அமரன் முதல் ஜிக்ரா வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் படங்களின் லிஸ்ட் !
sivakarthikeyan and Aarthi
மெரினா படம் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றியை குவித்த சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தார். அப்போது சினிமாவே வேண்டாம் என விலகும் மனநிலையில் இருந்த எஸ்.கே.வுக்கு உத்வேகம் அளித்து அவரை தொடர்ந்து நடிக்க சொன்னவர் ஆர்த்தி தானாம்.
Sivakarthikeyan Family
ஆர்த்தி பார்க்க சைலண்டாக இருந்தாலும் ஒருவரிடம் பேசி கனெக்ட் ஆகிவிட்டால் பேச்சில் சிவகார்த்திகேயனை மிஞ்சிவிடுவாராம். குடும்பத்தை திறம்பட வழிநடத்துவதோடு, சிவகார்த்திகேயன் நடத்தி வரும் டிரஸ்ட்டின் மேற்பார்வையாளரும் ஆர்த்தி தானாம். அவரின் உதவியால் பல ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளார்களாம்.
Who is Aarthi sivakarthikeyan
சிவகார்த்திகேயன் ஆர்த்தி ஜோடிக்கு மொத்த மூன்று குழந்தைகள். இதில் அவரின் மூத்த மகள் பெயர் ஆராதனா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிறந்தார். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு குகன் என்கிற ஆண்குழந்தையை பெற்றெடுத்த ஆர்த்திக்கு இந்த ஆண்டு பவன் என்கிற மூன்றாவது குழந்தையும் பிறந்தது.
Sivakarthikeyan wife and Kids
ஆர்த்தியை ஒவ்வொரு மேடையிலும் பெருமையுடன் பேசும் சிவகார்த்திகேயனிடம், உங்களுக்கு சிறந்த ஜோடி யார் என ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டபோது, என் மனைவி ஆர்த்தியை தவிர எனக்கு சிறந்த ஜோடி யாரும் இல்லை என சொன்ன சிவகார்த்திகேயன், அவர் இடத்தில் வேறுயாரையும் தன்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியாது என உருக்கமாக பேசி இருந்தார்.
இதையும் படியுங்கள்... இந்தியா முழுவதும் அடித்து நொறுக்கிய 'புஷ்பா 2'; ரூ.500 கோடி வசூல்; தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?