ஜெமினி கணேசனை வெறுத்தாரா ரேகா? தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காதது ஏன்?
பாலிவுட் நடிகை ரேகாவின் தந்தை ஜெமினி கணேசன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

Gemini Ganesan Daughter Rekha : பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் குடும்ப வாழ்க்கை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ரேகா சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். ரேகா எப்போதும் தனிமையாகவே காணப்பட்டார். ரேகாவின் தந்தை ஜெமினி கணேசன் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அவர் நடித்த காதல் படங்களுக்காக அவர் காதல் மன்னனாக இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார். சினிமாவை தாண்டி ஜெமினி கணேசன் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே இருந்திருக்கிறார்.
19 வயதில் திருமணம் செய்த ஜெமினி
ரேகாவின் தந்தை ஜெமினி கணேசனின் உண்மையான பெயர் ராமசாமி கணேசன். அவர் தனது வாழ்க்கையில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன் 1940ம் ஆண்டு தனது 19 வயதில் அலமேலு என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டார். ஜெமினிக்கு அலமேலு மூலம் நான்கு மகள்கள் இருந்தனர். அலமேலுவுக்குப் பிறகு ஜெமினி கணேசன், புஷ்பவல்லியுடன் என்பவருடன் ரகசிய உறவில் இருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் ரேகா.
இதையும் படியுங்கள்... நடிச்சது ஒரே ஒரு படம்; ஆனால் அதற்கு 3 தேசிய விருதுகள்! ஜெமினி கணேசனின் யூனிக் சாதனை
புஷ்பவல்லி - ஜெமினி கணேசன் காதல்
ஜெமினி கணேசனுக்கும், புஷ்பவல்லிக்கும் திருமணம் ஆகும் முன்னரே ரேகா பிறந்து விட்டார். மேலும் ரேகாவை தனது மகள் என்று கணேசன் ஒப்புக்கொள்ளவில்லை. ரேகா பிறந்தபோது ஜெமினி கணேசன் புஷ்பவல்லியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. புஷ்பவல்லியும் ஒரு நடிகை தான். சினிமாவில் நடித்த போது தான் புஷ்பவல்லி முதன்முதலில் ஜெமினியை சந்தித்தார், இருவரும் உருகி உருகி காதலித்தார்கள்.
ஜெமினி கணேசன் - ரேகா மோதல்
ஆனால் அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ரேகாவுக்கும் தன் தந்தை என்றால் பிடிக்காது. 2005ம் ஆண்டு மார்ச் 22ந் தேதி அன்று ஜெமினி கணேசன் இறந்த பிறகு ரேகா இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகா தன் தந்தையை போல் பல காதல் சர்ச்சைகளில் சிக்கினார். ஜெமினி கணேசனின் மகளாக இருந்தாலும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தாமல் பாலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தார் ரேகா.
இதையும் படியுங்கள்... பாவம் பார்த்த என் தாய் வாழ்க்கையை பங்கு போட்டவர் சாவித்திரி! வீட்டுக்குள் வந்தது எப்படி? ஜெமினி மகள் பளீச்!