எஸ்.பி.பி பற்றி பலருக்கும் தெரியாத சூப்பர் விஷயங்கள்... அரிய போட்டோஸுடன் அசத்தல் தகவல்கள் இதோ!
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களின் தாலாட்டாக இருந்த எஸ்.பி.பி. இன்றுடன் மறைந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. இதே நேரத்தில் நாம் எப்படிப்பட்ட பண்பாளரையும், பன்முக திறமையாளரையும் இழந்திருக்கிறோம் என தெரிந்துகொள்ளலாம் வாங்க...
பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை படித்தார்.
எஸ்.பி.பி கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு மெல்லிசை குழுவின் பாட்டி போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றார். அந்த போட்டிக்கு நடுவராக வந்த தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணிக்கு அவருடைய குரல் மிகவும் பிடித்து போனது.
இதையடுத்து தனது முதல் படமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா என்ற படத்தின் மூலமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை பாடகராக அறிமுகம் செய்து வைத்தார்.
1966ம் ஆண்டு ஹோட்டல் ரம்பா என்ற படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு சேர்ந்து அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடலை பாடினார். அது தான் எஸ்.பி.பி-யின் முதல் தெலுக்கு பாடல். ஆனால் அது வெளிவரவே இல்லை.
உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேஷன் குரலுக்கு டி.எம்.செளந்தர்ராஜனை தவிர வேறு யாரும் பொருத்தமாக பாட முடியாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் எஸ்.பி.பி.
6 முறை தேசிய விருது, ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகள், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் மட்டுமின்றி பல வெளிநாட்டு விருதுகளையும் அள்ளியுள்ளார்.
1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தார்.
பாடகராக மட்டுமல்ல பின்னணி குரல் கொடுப்பவராகவும் அசத்தியிருக்கிறார் எஸ்.பி.பி. தெலுங்கில் கமல் நடித்த படங்களுக்கு பெரும்பாலும் எஸ்.பி.பி. தான் குரல் கொடுத்திருக்கிறார்.
சிறந்த இசையமைப்பாளர் இதுவரை 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.