Vikram movie Review Out : விக்ரம் எப்படி இருக்கு ? ரிவ்யூ சொன்ன உதயநிதி ஸ்டாலின்!
Vikram movie Review Out : ‘விக்ரம் படம் சூப்பராக உள்ளது. இந்த அனுபவத்தை கொடுத்த கமல் சார், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.

vikram movie
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தின் ட்ரைலர் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் வெளியீட்டப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாக உள்ளது.
Vikram
விஜய் சேதுபதி, சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளனர்..க்ளைமேக்ஸ் காட்சியின்போது சூர்யா படத்தில் இடம்பெறுவார் என்றும், இந்த காட்சி விக்ரம் படத்தின் அடுத்த பாகங்களுக்கு லீடாக அமையும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்
vikram
விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் என்ன என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் கமலின் மகன் என்றும், கமலுடன் ட்ரெய்லரில் வரும் குழந்தை சூர்யா தான் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
vikram movie
நாளை வெளியாகவுள்ள இந்த படத்தை கமல் ஹாசன் தனது படக்குழுவோடு ஜூன் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை, ரோகினி திரையரங்கில் விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ப்ரீ புக்கிங்கில் நிச்சயம் 100 கோடியை தாண்டியிருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
vikram movie
இந்நிலையில் விக்ரம் படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின், படத்தை பார்த்து விட்டு ' விக்ரம் படம் சூப்பராக உள்ளது. இந்த அனுபவத்தை கொடுத்த கமல் சார், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் ப்ளாக்பஸ்டராவது உறுதி.’ என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.