MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Udhayanidhi :எதையும் விடுறதா இல்ல... வரிசையாக பெரிய படங்களை தட்டித்தூக்கும் உதயநிதி- இப்போ என்ன படம் தெரியுமா?

Udhayanidhi :எதையும் விடுறதா இல்ல... வரிசையாக பெரிய படங்களை தட்டித்தூக்கும் உதயநிதி- இப்போ என்ன படம் தெரியுமா?

Udhayanidhi : விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

1 Min read
Author : Ganesh A
Published : May 06 2022, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்பட,ம் ராக்கெட்ரி : நம்பி விளைவு. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடித்திருக்கும் மாதவன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதோடு, தனது சொந்த செலவில் தயாரித்தும் உள்ளார். நடிகர் மாதவன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலையும் ஆனார். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் மாதவன்.

34

இப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். ஏற்கனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர்கள் தற்போது 3வது முறையாக இணைந்துள்ளனர். நடிகர் ஜெகன், இப்படத்தில் சயின்டிஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

44

வருகிற ஜூலை 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 6 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. வருகிற மே 19-ந் தேதி பாரிஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Nayanthara : காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved