MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இறப்புக்கு பின் வெளியான 20 படங்கள்; கோலிவுட்டில் 69 வயது வரை கலக்கிய நடிகர் யார் தெரியுமா?

இறப்புக்கு பின் வெளியான 20 படங்கள்; கோலிவுட்டில் 69 வயது வரை கலக்கிய நடிகர் யார் தெரியுமா?

Kollywood Actor : பிரபல தமிழ் நடிகர் ஒருவரின், 20 படங்கள் அவரது மறைவுக்கு பிறகு வெளியாகியுள்ளது என்றால் அதை உங்களால் நம்ப முடியுமா?

2 Min read
Author : Ansgar R
Published : Nov 23 2024, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kollywood Actor

Kollywood Actor

தமிழ் சினிமாவை பொருத்தவரை டாப் நடிகர்கள் என்கின்ற இடத்திற்கு செல்லாவிட்டாலும் கூட, குணச்சித்திரம் மற்றும் காமெடி என்று இந்த இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு வலம் வந்த நடிகர்கள் பலர் உண்டு. உண்மையில் அதில் பலர் தற்பொழுது நம்மிடையே இல்லை என்பது தான் அதீத வருத்தம் அளிக்கும் செய்தியாக இருக்கிறது. அண்மையில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் தொடங்கி விவேக், மயில்சாமி, மனோபாலா போன்ற பல சிறப்பான நடிகர்கள் இந்த தமிழ் திரை உலகில் இனி இல்லை என்கின்ற அந்த ஒரு விஷயம் பல சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது என்றே கூறலாம்.

இந்த விஷயத்தில் ரஜினி, விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்! 2024-ன் நம்பர் 1 ஹீரோவா மாறிட்டாரே!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Manobala

Actor Manobala

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவருடைய 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அவருடைய மறைவுக்கு பிறகு வெளியாகி உள்ளது என்பது பலர் அறியாத விஷயம். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மையோடு தமிழ் சினிமாவில் வலம்வந்த மனோபாலா தான். கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான "ஆகாய கங்கை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அதற்கு முன்னதாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.

34
Manobala

Manobala

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்த மனோபாலா கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற "சதுரங்க வேட்டை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அந்த திரைப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த திரைப்படம் தான் அவருடைய முதல் திரைப்படமாகும். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "பாம்பு சட்டை" என்கின்ற திரைப்படத்தையும் மனோபாலா தயாரித்து வழங்கி இருந்தார். 

தமிழ் திரையுலகை பொருத்தவரை இணை இயக்குனராக, நடிகறாக, தயாரிப்பாளராக, டப்பிங் கலைஞராக இப்படி பல திறமைகளோடு வளம் வந்த மனோபாலா கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு பிறகு தமிழில் மட்டும் "தீரா காதல்", "காசேதான் கடவுளடா", "ராயர் பரம்பரை" தொடங்கி இந்த ஆண்டு வெளியான "இந்தியன் 2" மற்றும் "அந்தகன்" வரை 20 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

44
Late Actor Manobala

Late Actor Manobala

தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை மனோ பாலாவிற்கு உண்டு. தமிழ் திரை உலகை பொருத்தவரை பிரசாந்த் நடிப்பில் வெளியான "அந்தகன்" என்கின்ற திரைப்படம் தான் அவர் இறுதியாக தமிழில் நடித்த திரைப்படம். தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் படங்களில் நடித்துள்ள மனோபாலா பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் குக்காக பங்கேற்று ஒரு சில எபிசோடுகளில் அசத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தளபதியின் பிரியாணி விருந்து! கண்டீஷன் போட்டு அனுமதிக்க பட்டார்களா விவசாயிகள்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved