MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 200 ரூபாய்-க்கு அடிமை என சண்டை போட்டவர் அதிரடி கைது..! சோசியல் மீடியா வைரல் வீடியோவால் வந்த வினை

200 ரூபாய்-க்கு அடிமை என சண்டை போட்டவர் அதிரடி கைது..! சோசியல் மீடியா வைரல் வீடியோவால் வந்த வினை

சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்த புகாரில், த.வெ.க. உறுப்பினரான ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2025, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
TVK
Image Credit : youtube

TVK

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினருமான கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த இவர் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இட்லி கடை திரைப்படத்தை காண சென்றிருந்தார். அப்போது படம் முடிந்து வெளியே வருபவர்களிடம் விமர்சனம் கேட்கப்பட்டது. அப்போது ரோஸ்ட் பிரதர்ஸ் என்கிற யூடியூபர்கள் படம் குறித்து தங்கள் விமர்சனத்தை கூறி வந்தனர். அவர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் என்கிற விமர்சனமும் பரவலாக உண்டு.

இந்த நிலையில், படம் பார்க்க வந்த விஜய் ரசிகரும், தவெக உறுப்பினருமான ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கோகுல் என்பவர், பேட்டி கொடுத்து வந்த ரோஸ்ட் பிரதர்ஸை பார்த்து 200 ரூபாய் அடிமைகள் என விமர்சித்தார். அதற்கு அவர்கள் இத்தனை ஆண்டுகளாக திமுக நடத்திய கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததில்லை. கரூரில் ஏன் இப்படி நடந்தது என அந்த ரசிகர்களை மடக்கிப் பிடித்த ரோஸ்ட் பிரதர்ஸ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேலே கைவைத்தால் சொருகிடுவேன் என்று மிரட்டும் தொனியில் கோகுல் பேசினார்.

தவெக உறுப்பினர் கைது

இந்த நிலையில், சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம் தகராறு செய்ததாக தவெக உறுப்பினரான கோகுல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோஸ்ட் பிரதர்ஸ் யூடியூபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் கோகுல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Related Stories
Recommended image1
விஜய்க்கு மட்டும் கருணை காட்டும் தமிழக போலீஸ்..? திமுக.வுடன் தவெக அண்டர் டீலிங்..? பகீர் கிளப்பும் திருமா
Recommended image2
விஜய் வர வரைக்கும் மக்கள் வெயில்ல இருந்து சாகனுமா.? வேற ஆப்ஷன் இல்ல.. வசமாக சிக்கிய தவெக வழக்கறிஞர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved