MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா முதல் திரிஷா வரை... சினிமா நடிகைகள் குத்திய டாட்டூஸ் பின்னணியில் இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா!!

நயன்தாரா முதல் திரிஷா வரை... சினிமா நடிகைகள் குத்திய டாட்டூஸ் பின்னணியில் இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா!!

Tamil Actress Secret Tattoos : சினிமா நடிகைகளுக்கு டாட்டூ குத்திக் கொள்வதிலும் தனி ஆர்வம் உண்டு, அந்த வகையில் கோலிவுட் நடிகைகள் குத்தியுள்ள டாட்டூஸ் பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 24 2024, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha and Trisha Tattoos

Samantha and Trisha Tattoos

சினிமா நடிகைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது உண்டு. அப்படி கோலிவுட்டில் சில முன்னணி நாயகிகள் விதவிதமாக டாட்டூ போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி கோலிவுட் ஹீரோயின்ஸ் குத்திய டாட்டூஸ் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் சீக்ரெட்ஸ் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நடிகை சமந்தாவுக்கு டாட்டூ என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் உடலில் பல இடங்களில் அவர் டாட்டூ குத்தி இருந்தார். அதில் நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கும் போது அவரது பெயரை இடுப்பு பகுதியில் குத்தி இருந்தார் சமந்தா, பின்னாளில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததை அடுத்து அந்த டாட்டூவை நீக்கிவிட்டார் சமந்தா.

நடிகை திரிஷா தன் உடலில் மூன்று இடங்களில் டாட்டூ குத்தி இருக்கிறார். அதில் ஒன்று அவர் தன்னுடைய ராசிக்கான அடையாளத்தை கையில் குத்தி இருக்கிறார். பின்னர் தனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான நீமோ மீனை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். இறுதியாக சினிமா மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தன் முதுகில் கேமராவை டாட்டூவாக குத்தி இருக்கிறார் திரிஷா.

25
Nayanthara and Shruti Haasan Tattoos

Nayanthara and Shruti Haasan Tattoos

நடிகை நயன்தாராவும் டாட்டூ பிரியை தான். இவர் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரது பெயரை தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். பின்னர் பிரபுதேவா உடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை பிரேக் அப் செய்து பிரிந்த நயன்தாரா பிரபுதேவா என்று இருந்ததை பாசிடிவிட்டி என மாற்றி டாட்டூவாக குத்திக் கொண்டார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக தன் முதுகில் தமிழ் கடவுள் முருகனின் வேல் டிசனை டாட்டூ குத்தி உள்ளதோடு ஷ்ருதி என தமிழில் பெயரையும் எழுதி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... MGR-க்கு எழுதிய பாடல் வரியை விஷால் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்த வாலி - அது என்ன பாட்டு தெரியுமா?

35
Rashmika, anupama Tattoos

Rashmika, anupama Tattoos

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா தன்னுடைய மார்பு பகுதியில் ஒரு பெரிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். அதேபோல் பான் இந்தியாவின் செம்ம பிசியான நடிகையாக உலா வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன் கையில் irreplaceable என்கிற வார்த்தையை டாட்டுவாக குத்தி இருக்கிறார். அதேபோல் அனுபமா பரமேஷ்வரன் தன் நெஞ்சில் குட்டியான டாட்டூ போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடித்துள்ளார்.

45
Priyamani, Amala Paul Tattoos

Priyamani, Amala Paul Tattoos

பருத்திவீரன் படத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகை பிரியாமணி. இவர் தன்னுடைய கையில் daddy girl என டாட்டூ குத்தி இருக்கிறார். தந்தை மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் இவ்வாறு டாட்டூ குத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாசக்கார புள்ள என பிரியாமணியை பாராட்டி வருகின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் தன்னுடைய முதுகில் ரங்கோலி போல் மிகப்பெரிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். முதலில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த அமலா பால், கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

55
Varalaxmi, Kushbhu Tattoos

Varalaxmi, Kushbhu Tattoos

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு டாட்டூ என்றால் மிகவும் இஷ்டமாம். இதனால் அவர் தன்னுடைய முதுகில் பெரிய டிராகன் டாட்டூ ஒன்றை போட்டிருக்கிறார். இதையடுத்து சினிமா மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக கையில் இரண்டு முகமூடிகள் கொண்ட டாட்டூவை குத்தி உள்ளார். இதுதவிர கையில் பெமினைன் சிம்பலையும் டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

90ஸில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கும் டாட்டூ மீது அலாதி பிரியம். அதனால் பல இடங்களில் டாட்டூ குத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கையில் தன் செல்ல மகள்களான அனந்திதா, அவந்திகா ஆகியோரின் பெயர்களை டாட்டூவாக குத்தி உள்ளார் குஷ்பு.

இதையும் படியுங்கள்... மணிமேகலை இப்படி பண்ணிருக்க கூடாது; பிரியங்கா போன் போட்டு அழுகுறா! CWC பஞ்சாயத்தில் இறங்கிய வனிதா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved