MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரிஷா - சன்னி லியோன் படங்கள் மோதல்! இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ

திரிஷா - சன்னி லியோன் படங்கள் மோதல்! இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ

டிசம்பர் 30-ந் தேதி  திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ள நிலையில், அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 29 2022, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தமிழ் சினிமாவுக்கு 2022-ம் ஆண்டு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்கள் கிடைத்தன. இதனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டின் கடைசி வாரம் இது என்பதால், இந்த வார இறுதியில் திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்

தமிழ் சினிமாவில் வருகிற டிசம்பர் 30-ந் தேதி திரிஷாவின் ராங்கி, சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட், ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா மற்றும் கோவை சரளா நடித்துள்ள செம்பி என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட 4 படங்கள் ரிலீசாக உள்ளன. இதுதவிர காலேஞ் ரோடு, அருவா சண்ட, சகுந்தலாவின் காதலன், கடைசி காதல் கதை ஆகிய நான்கு சிறு பட்ஜெட் படங்களும் திரைக்கு வர உள்ளன.

இதையும் படியுங்கள்... வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த டார்கெட் சிவகார்த்திகேயன்... அவர் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன தில் ராஜு..!

23

ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்

ஓடிடி-யை பொறுத்தவரை இந்த வாரம் 5 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன. அதில் நான்கு படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடாகவும், ஒரே ஒரு படம் மட்டும் நேரடி ஓடிடி வெளியீடாகவும் ரிலீசாக உள்ளன. அதன்படி நயன்தாராவின் கோல்டு, விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, அதர்வாவின் பட்டத்து அரசன் ஆகிய நான்கு படங்களும் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடுகள். இதில் கட்டா குஸ்தி ஜனவரி 1-ந் தேதியும், கோல்டு டிசம்பர் 29-ந் தேதியும் மற்ற படங்கள் வருகிற டிசம்பர் 30-ந் தேதியும் ரிலீசாக உள்ளன.

33

இதில் கோல்டு படம் அமேசான் பிரைமிலும், டிஎஸ்பி படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட்டிலும், கட்டா குஸ்தி மற்றும் பட்டத்து அரசன் நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளன. அதேபோல் நேரடி ஓடிடி வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ள உடன்பால் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... 'கருமேகங்கள் கலைகின்றன' படமல்ல வாழ்க்கை - இயக்குநர் பாரதிராஜா புகழாரம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image2
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Recommended image3
"யார் இவன்? எனக்கா பாடப்போறான்?" - சிவாஜி கணேசனின் கர்ஜனை... நடுங்கிப்போன பாடகர் மனோ! என்ன நடந்தது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved