இளையராஜா இசை நிகழ்ச்சி...நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்..
இளையராஜாவின் இசை கச்சேரியை தொடர்ந்து தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ilayaraaja
கச்சேரியில் கலக்கும் இளையராஜா :
70கள் முதல் இன்று வரை ரசிர்கர்களை இசையால் வசியம் செய்து வரும் இளையராஜா படங்களை தொடர்ந்து நேரலையில்கலக்கி வருகிறார்.. இதுவரை 20,000 க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்.
ilaiyaraja
கொரோனாவால் தள்ளிப்போன கான்செர்ட் :
கொரோனா காரணமாக கடந்த 2019 -ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா காரணமாக இளையராஜாவின் கச்சேரிகள் ஓத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் இவரின் லைவ் ஷோ து
ilaiyaraja
துபாயில் கலக்கிய இளையராஜா :
சமீபத்தில் துபாயில் இளையராஜாவின் கான்செர்ட் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அனிரூத் இருவரும் கலந்து கொண்டு மாஸ் காட்டி இருந்தனர். இவர்களின் இசையில் துபாய் நனைந்து தான் போனது.
ilaiyaraj
சென்னையில் ராக் வித் ராஜா :
துபாயை தொடர்ந்து ராக் வித் ராஜா என்கிற பெயரில் சென்னையில் நாளை கச்சேரி நடைபெறவுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் இரவு 10.30 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது.
ilaiyaraja
இளையராஜா உடன் டி.எஸ்.பி :
நாளை நடைபெறவுள்ள இளையராஜா கச்சேரியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் பிரபல இசையமைப்பாளர் டி.எஸ்.பி கலக்க உள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் தனது மேஜிக்கை கட்டியிருந்தாள் தேவி ஸ்ரீ பிரசாத்.
ilaiyaraja
போக்குவரத்து மாற்றம் :
நெரிசலை குறைப்பதற்காக ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாக அண்ணாசாலை செல்பவர்கள் மற்றும் காமராஜர் சாலையிலிருந்து கோடி மரம் வழியாக அண்ணாசாலை செல்பவர்கள் ஈ.வி.ஆர் சாலை செல்பவர்கள் மாற்று வழியில் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
ilaiyaraja
காமராஜர் சாலையை அடைய :
அதேபோல ராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், ஆர்பிஐ சுரங்கப்பாதை வழியாக செல்லாமல், வடக்கு கோட்டை பக்க சாலை, முத்து சாமி சாலை, ஈவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ilaiyaraja
காமராஜர் சாலையை அடைய :
ஈவிஆர் சாலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்எம்சி பாயிண்டில் வலது புறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ilayaraaja
ராஜாஜி சாலையை அடைய :
அதேப்போன்று அண்ணாசாலை பகுதியில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக இராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, முத்து சாமி சாலை வழியாக ராஜாஜி சாலையை அடையலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.