MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

ஓடிடியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

ஓடிடியில் அதிகம் வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 17 2025, 10:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 Most Watched Movies and Web series on OTT
Image Credit : Instagram

Top 5 Most Watched Movies and Web series on OTT

ஓடிடி தளங்களின் மின்னல் வேக வளர்ச்சியால் தற்போது புதுப்படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்து வருகிறது. தற்போதைய சூழல் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. அதனாப் புதுப்படங்களை ஓடிடியில் பார்க்கவே மக்கள் முனைப்பு காட்டி வருகிறர்கள். தியேட்டருக்கு சென்றால் டிக்கெட் செலவு, பார்க்கிங் செலவு, ஸ்நாக்ஸ் செலவு என பல ஆயிரம் செலவாகிவிடும். அதற்கு வீட்டிலேயே பேமிலியோடு ஓடிடியில் பார்த்துவிடலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் மாறி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஜூன் 9ந் தேதி முதல் ஜூன் 15ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிகம் வியூஸ் அள்ளிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.

24
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள்
Image Credit : x

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள்

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்தை கடந்த வாரம் மட்டும் 33 லட்சம் வியூஸ் பெற்றூள்ளது. அதேபோல் ராஜ்குமார் ராவ் நடித்த இந்தி திரைப்படமான bhool chuk maaf நான்காம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இப்படம் 46 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Related Articles

Related image1
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரை வீட்டிற்கே அழைத்து பாராட்டிய ரஜினி
Related image2
ராணா நாயுடு சீசன் 2 நெட்பிளிக்ஸ் சீரிஸ் விமர்சனம்!
34
அதிக வியூஸ் அள்ளிய டூரிஸ்ட் ஃபேமிலி
Image Credit : simran instagram

அதிக வியூஸ் அள்ளிய டூரிஸ்ட் ஃபேமிலி

சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் வெளியாகி உள்ள பட்டியலில் 53 லட்சம் பார்வைகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இதையடுத்து முதல் இரண்டு இடங்களை இந்தி படங்கள் தான் பிடித்துள்ளன. இரண்டாம் இடத்தில் 57 லட்சம் வியூஸ் உடன் அக்‌ஷய் குமாரின் கேசரி சாப்டர் 2 படம் உள்ளது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. முதலிடத்தில் ஜாட் திரைப்படம் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 63 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளது.

44
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள்
Image Credit : Instagram/ Rana Daggubati

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள்

அமேசான் எம்.எக்ஸ். பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் கேமர்லாக் வெப் தொடர் 16 லட்சம் பார்வைகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக 22 லட்சம் வியூஸ்களுடன் Lafangey என்கிற வெப் தொடர் நான்காம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் எம்.எக்ஸ். பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

The Traitors என்கிற இந்தி வெப் தொடர் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 27 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. அதேபோல் ராணா டகுபதி, வெங்கடேஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ராணா நாயுடு சீசன் 2 வெப் தொடர் 32 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. Criminal Justice: A Family Matter என்கிற வெப் தொடர் 53 லட்சம் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரை வீட்டிற்கே அழைத்து பாராட்டிய ரஜினி
Recommended image2
ராணா நாயுடு சீசன் 2 நெட்பிளிக்ஸ் சீரிஸ் விமர்சனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved