சிவாஜி முதல் 2.0 வரை! பாலிவுட்டிலும் பட்டைய கிளப்பிய ரஜினி படங்கள்! மிஸ் பண்ணாம பாருங்க!
70 வயதுக்கு மேல் ஆனாலும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இருப்பவர் ரஜினிகாந்த். இவர் சிவாஜி, சந்திரமுகி, கபாலி போன்ற படங்கள் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அந்த வகையில் இந்தியில் ரஜினி நடித்த சிறந்த 5 படங்களை இத்தொகுப்பில் காணலாம்.
Superstar Rajinikanth Hit Movies in Bollywood
முதுபெரும் நடிகராகிவிட்ட ரஜினிகாந்த் இன்னமும் தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராகவே வலம் வருகிறார். அவரது ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என்றும் தலைவர் என்று அழைக்கிறார்கள். 73 வயதான அவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள சில குறிப்பிடத்தக்க பாலிவுட் படங்களைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Superstar Rajinikanth in Chandramuki
சந்திரமுகி (2005)
இது ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் படம். சந்திரமுகியில் ரஜினிகாந்த் ஒரு மனநல மருத்துவராக நடித்தார். வேட்டைய புரம் அரண்மனை மர்மத்தைத் தீர்க்க உதவி செய்கிறார். புதிரான கதைக்களம், வடிவேலுவுடன் அவரது ரகளையான காமெடி ஆகியவை ரசிர்களைக் கவரக்கூடியவை.
Superstar Rajinikanth in Sivaji The Boss
சிவாஜி: தி பாஸ் (2007)
'சிவாஜி: தி பாஸ்' படத்தில், ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காக இந்தியா திரும்பும் சாப்ட்வேர் இன்ஜினியராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பரபரப்பான படத்தில் இவருடைய மாறுபட்ட தோற்றங்களும் பன்ச் வசனங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
Superstar Rajinikanth in Enthiran
எந்திரன் (2010)
எந்திரன் ஒரு விஞ்ஞான புனைவு திரைப்படமாகும். இதில் ரஜினிகாந்த் ஒரு விஞ்ஞானியாகவும் ரோபோவாகவும் தோன்றுகிறார். எதிர்காலத்தைப் பற்றிய வியக்க வைக்கும் காட்சிகளால் நிரம்பிய இந்தப் படம் இந்திய சினிமாவில் ரஜினியின் முக்கியப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் இரண்டாவது பாகமான 2.0 படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
Superstar Rajinikanth in Kabali
கபாலி (2016)
கபாலியில், ரஜினிகாந்த் தனது எதிரிகளைப் பழிவாங்கும் ஒரு வயதான கேங்ஸ்டராக நடித்தார். பழிவாங்கும் நோக்கம் கொண்டவராகவும் இரக்கமுள்ளவராகவும் ரஜினியின் கதாபாத்திர சித்தரிப்பு கதைக்களத்துடன் பொருந்திப் போகிறது.
Superstar Rajinikanth in Kaala
காலா (2018)
காலா படத்திலும் ரஜினிக்கு கேங்ஸ்டர் பாத்திரம்தான். மும்பையில் ஒரு ரவுடிக் கூட்டத்தின் தலைவராக வரும் ரஜினி மக்களின் உரிமைகளுக்காக போராடுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தைரியமான சமூகக் கருப்பொருள்கள் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படம் சவுதி அரேபியாவில் சிறப்புத் திரையிடலுடன் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.