- Home
- Cinema
- ஒரு இசையமைப்பாளராக ரசிகர்களை துள்ளிக் குதித்து ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!
ஒரு இசையமைப்பாளராக ரசிகர்களை துள்ளிக் குதித்து ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!
விஜய் ஆண்டனி கொடுத்த பாடல்களில் டாப் 5 பெஸ்ட் சாங்ஸ் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரசிகர்களை துள்ளிக் குதித்து ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!
சினிமாவைப் பொறுத்த வரையில் நாளுக்கு நாள் புதிய நடிகர், நடிகைகளின் வருகையும் இருப்பதோடு புது புது படங்களின் வருகையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் எண்ணற்ற படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி கொண்டிருக்கிறது. புதிய நடிகர், நடிகைகள் ஒருபுறம் இருக்க இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் இப்போது நடிகராக மாறி வருகின்றனர்.
விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!
அதற்கு ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன், விஜய் ஆண்டனி ஆகியோர் தான் சிறந்த உதாரணம். இதில் இப்போது டாப் டிரெண்டிங்கில் இருப்பது விஜய் ஆண்டனி தான். அடுத்தடுத்து ரசிகர்களை தனது கவனத்திலேயே வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வருவது தான் முக்கிய காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
ரசிகர்களை துள்ளிக் குதித்து ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனியின் டாப் 5 சாங்ஸ்!
இந்தப் படம் வெளியாகி ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு ஹிட் கொடுத்த படங்களில் இந்தப் படமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி விஜய் ஆண்டனி இசையமைத்து ஹிட் கொடுத்த டாப் பெஸ்ட் சாங்ஸ் என்னென்ன என்று பார்க்கலாம்.
சுக்ரன், டிஷ்யூம், இருவர் மட்டும், நான் அவனில்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு, உத்தம புத்திரன், சட்டப்படி குற்றம், வெடி, வேலாயுதம் என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2006ல் வெளியான டிஷ்யூம்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் தான் டிஷ்யூம். ஜீவா, சந்தியா, நாசர் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அப்படி என்ன பாடல் என்றால் அதுதான் டைலாமோ டைலாமோ பாடல்.
2007ல் வெளியான நான் அவன் இல்லை
கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் நான் அவன் இல்லை. பெண்களை ஏமாற்றி பணத்தை ஆட்டைய போடும் ஹீரோவை பற்றிய படம் தான் நான் அவன் இல்லை. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்ச தண்ணி பத்திக்கிச்சு என்ற பாடல் இன்றும் ரசிகர்களை துள்ளலாக குத்தாட்டம் போட வைக்கிறது.
2008ல் வெளியான காதலில் விழுந்தேன்:
கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காதலில் விழுந்தேன். இந்தப் படத்தில் இடம் பெற்ற நாக்கு மூக்கா பாடல் இன்றும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கிறது.
2011ல் வெளியான வெடி:
இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி, பூனம் கௌர், விவேக் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் வெடி. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் நான் பம்பாய் பொண்ணு. இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் இச்சு இச்சு இச்சு கொடு பாடல்.
2014ல் திரைக்கு வந்த சலீம் படம்:
இயக்குநர் என் வி நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாமிநாதன், அருள்தாஸ், பிரேம்ஜி அமரன், அக்ஷா பர்தசானி ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான படம் தான் சலீம். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் மஸ்காரா போட்டு மயக்குறீயே. இந்தப் பாடல் ரசிகர்களை துள்ளாக ஆட்டம் போட வைக்கிறது.