MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சண்டைக் காட்சிகளே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் டாப் 5 படங்கள்!

சண்டைக் காட்சிகளே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் டாப் 5 படங்கள்!

Super Hit Tamil Movies Without Fight Scenes: சினிமாவில் காதல், சண்டை, பாடல் காட்சிகள் இல்லாத படங்களைப் பார்ப்பது அரிது. ஆனால், சண்டைக் காட்சிகளே இல்லாமல் வெற்றி பெற்ற டாப் 5 படங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Oct 29 2024, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Muthal Mariyathai, Sivaji Ganesan

Muthal Mariyathai, Sivaji Ganesan

சினிமா என்றாலே காதல், சண்டை, பாடல் காட்சிகள் இல்லாத படங்களை பார்த்திருக்க முடியாது. இப்போது வரும் படங்களில் எல்லாம் இது தான் டிரெண்ட். சின்ன பட்ஜெட் படம் முதல் பெரிய பட்ஜெட் படம் வரையில் காதல், சண்டை மற்றும் பாடல் காட்சிகள் கொண்டு தான் எடுக்கப்படுகின்றன. ஆனால், சண்டைக் காட்சிகளே இல்லாமல் சைலண்டா திரைக்கு வந்து ஹிட் கொடுத்த டாப் 5 படங்களை பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

26
Nanban Movie

Nanban Movie

நண்பன்:

விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் பலர் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் தான் நண்பன். 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்திருந்தார் இயக்குநர் ஷங்கர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் கூட இல்ல. ஆனால், செண்டிமெண்ட் காட்சிகள், காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் என்று பிரமிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஷங்கர்.

36

தெய்வத்திருமகள்:

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால், அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் தெய்வத் திருமகள். அப்பா – மகள் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் சென்று ஹிட் கொடுத்தது. பாடல் காட்சிகளும் பிரமாதம். இந்தப் படத்தில் விக்ரம் அறிவுசார் ஊனமற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இந்தப் படத்திற்கு விக்ரமின் நடிப்புத் திறமைக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.

46

காக்கா முட்டை:

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், ஜே விக்னேஷ் மற்றும் வி ரமேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் காக்கா முட்டை. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சிகள் கூட இடம் பெறவில்லை. ஆனால், படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்தது.

56
Naduvula Konjam Pakkatha Kaanom

Naduvula Konjam Pakkatha Kaanom

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோ நடிப்பில் 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்த படத்தில் கிரிக்கெட் விளையாடும் போது விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டுவிடும். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்திற்கு ஹைலைட்டே. ஆனால், இந்தப் படத்தில் ஒரு ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் கூட கிடையாது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

66

ட்அபியும் நானும்:

த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் அபியும் நானும். முழுக்க முழுக்க அப்பா மகள் உறவு கதையை மையப்படுத்திய இந்தப் படம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை எடுத்துரைத்தது. அன்பு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்தது.

இந்தப் படங்கள் தவிர திருச்சிற்றம்பலம், ஓ மை கடவுளே, காற்றின் மொழி, கல்யாண சமையல் சாதம், மொழி, அழகிய தீயே, புதுவசந்தம், முதல் மரியாதை, மௌன ராகம், ஒருதலை ராகம், குங்குமச்சிமிழ், நான்பாடும் பாடல், உன்னைநான் சந்தித்தேன், தென்றலே என்னை தொடு, சம்சாரம் அது மின்சாரம் என்று எத்தனையோ படங்கள் சண்டைக் காட்சிகள் இல்லாமல் திரைக்கு வந்து ஹிட் கொடுத்துள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்
தமிழ் சினிமா
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi: தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி எழுதிய 'தாய் கிழவி'! ஒரே வாரத்தில் கோடிகளைக் குவித்த ராதிகா சரத்குமார்!
Recommended image2
தேவசகாயம் ரிட்டர்ன்ஸ்..? ஜோடியாக ஆபத்தில் சிக்கும் ஜனனி - சக்தி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved