காலத்தால் அழியாத என்றும் மனதில் நிற்கும் எவர்கிரீன் டாப் 5 சிறந்த தமிழ் படங்கள்!
Top 5 Evergreen Tamil Movies : தமிழ் சினிமாவில் என்று அழிக்க முடியாத காலத்தால் அழியாத டாப் 5 சிறந்த தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்

காலத்தால் அழியாத எவர்கிரீன் டாப் 5 சிறந்த தமிழ் படங்கள்!
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் புதிய படங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி வரும் படங்கள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடுகின்றன. அதன் பிறகு வந்த வேகத்தில் ஓடிடிக்கு பார்சல் கட்டப்படுகின்றன. இப்படி கோடி கோடியாய் எடுக்கப்படும் படங்களின் திரையரங்குகளில் ஓடும் வாழ்நாள் எண்ணிக்கை என்னவோ 30 நாட்கள் என்றாகிவிட்டது. இனி வரும் நாட்களில் திரையரங்குகள் கூட இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காலத்தால் அழியாத எவர்கிரீன் டாப் 5 சிறந்த தமிழ் படங்கள்!
இப்படிப்பட்ட ஒரு சூழலில் பெஸ்ட் அல்லது சிறந்த எவர்கிரீன் அல்லது காலத்தால் அழியாத படங்கள் என்று நினைக்கும் போது நம் மனதிற்கு வருவது பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த படங்கள் தான். அந்தப் படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. இருப்பினும் ஒரு சில படங்கள் அவற்றின் கதைக்காக மட்டுமின்றி காட்சிப்படுத்தப்பட்ட விதம், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசை, சமூகத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றிற்காகவும் தனித்து நிற்கின்றன.
காலத்தால் அழியாத எவர்கிரீன் டாப் 5 சிறந்த தமிழ் படங்கள்!
அப்படி தனித்து நிற்க கூடிய காலத்தால் அழியாத டாப் 5 சிறந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். என்றுமே காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படம் தான். இந்தப் படம் மட்டுமின்றி படத்தின் டயலாக், பாடல் காட்சிகள் என்று அனைத்துமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.
நாயகன் (Nayagan - 1987):
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், கார்த்திகா, நாசர் ஆகியோர் பலர் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான படம் தான் நாயகன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த கேங்ஸ்டர் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதுதான் படத்திற்கான அங்கீகாரம். படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட காலத்தால் அழியாமல் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் மும்மூர்த்திகளாக கமல் ஹாசன், இளையராஜா மற்று மணிரத்னம் ஆகியோருக்கு கிடைத்த வரப்பீரசாதம்.
திருவிளையாடல் (Thiruvilaiyadal - 1965):
இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1965ஆம் ஆண்டு வெளியான ஒரு காவியப் பக்திப் படம். சிவனின் திருவிளையாடல் பற்றிய காட்சிகளை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகியிருந்தது. சிவாஜியின் கம்பீரமான நடிப்பு, பக்திப் பாடல்கள் மற்றும் காலத்தால் அழியாத வசனங்களுக்காக இன்றும் மக்களால் ரசிக்கப்படும் ஒரு படமாக திகழ்கிறது.
16 வயதினிலே (16 Vayathinile - 1977):
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் 16 வயதினிலே. இந்தப் படம் கமல் ஹாசனுக்கு மட்டுமின்றி ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai - 1964):
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ஒரு மாபெரும் வெற்றிப் பெற்ற நகைச்சுவைத படம். இதன் புதுமையான கதைக்களம், ஜனரஞ்சகமான நகைச்சுவை காட்சிகள், மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதனின் அற்புதமான பாடல்கள் இன்றும் ரசிகர்களைக் கவர்கின்றன. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த காமெடி படங்களில் இந்தப் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மௌன ராகம் (Mouna Raagam - 1986):
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வெளியான படம் தான் மௌன ராகம். காதல் மற்றும் உறவுச் சிக்கல்களை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகி இருந்தது. இளையராஜாவின் மயக்கும் இசையும், கதாபாத்திரங்களின் எதார்த்தமான சித்தரிப்பும் இந்தப் படத்தை ஒரு கிளாசிக் படமாக மாற்றியது.