MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்பஸ்தன் முதல் விடாமுயற்சி வரையில் இந்த மாதம் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!

குடும்பஸ்தன் முதல் விடாமுயற்சி வரையில் இந்த மாதம் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!

Top 4 Best Movies From Kudumbasthan to Vidaamuyarchi OTT Release In March : குடும்பஸ்தன் முதல் விடாமுயற்சி வரையில் இந்த மாதம் ஓடிடி தளத்திற்கு வரும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 01 2025, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

Top 4 Best Movies OTT Release In March : குடும்பஸ்தன் முதல் விடாமுயற்சி வரை மார்ச் மாதம் ஓடிடிக்கு வரும் படங்கள் பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு வாரமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருவதும் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த படங்கள் ஓடிடிக்கு வருவதும் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் நடைபெற்று வருகிறது. இதுவே ஒரு மாஸ் படமாக இருந்தால் அந்தப் படம் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்படும். அதுவும், இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று வெளியிடப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Top 4 Best Movies OTT Release In March

Top 4 Best Movies OTT Release In March

இந்த நிலையில் தான் கடந்த மாதம் திரைக்கு வந்த படங்கள் இந்த மாதம் ஓடிடிக்கு வந்துவிட்டன. அந்த படங்கள் என்னவென்று பார்க்கலாம். குடும்பஸ்தான் முதல் அஜித் குமாரின் விடாமுயர்ச்சி வரை Netflix, Zee5 மற்றும் SonyLIV போன்ற OTT தளங்களில் வர உள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.

38
Kudumbasthan to Vidaamuyarchi OTT Release In March

Kudumbasthan to Vidaamuyarchi OTT Release In March

ஓடிடியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் குடும்பஸ்தன்:

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குடும்பஸ்தன் (Kudumbasthan OTT Release). முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் கடன் வாங்குவதையும், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன் தனது குடும்பக் கஷ்டத்தை எப்படியெல்லாம் சமாளிக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டியது. அன்றாட நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம் என்பதால் இந்தப் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து.

48
Kudumbasthan OTT Release In March

Kudumbasthan OTT Release In March

குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைமாக அமைந்தது. அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, ஆர் சுந்தர்ராஜன், குரு மோகனசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

58
Vidaamuyarchi OTT Release In March

Vidaamuyarchi OTT Release In March

விடாமுயற்சி (Vidaamuyarchi OTT Release)

ஓடிடியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விடாமுயற்சி படமும் ஒன்று. கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சோலோவாக திரைக்கு வந்த விடாமுயற்சி ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற விடாமுயற்சி ரூ.138 கோடி வரையில் வசூல் குவித்தது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹாலிவுட் படமாக பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

68
Kudumbasthan to Vidaamuyarchi OTT Release In March

Kudumbasthan to Vidaamuyarchi OTT Release In March

இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியாகி 25 நாட்களில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் ரூ.100 கோடி கொடுத்து பெற்றுள்ளது. தமிழில் வெளியாவதோடு மட்டுமின்றி விடாமுயற்சி படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

78
Sankranthiki Vasthunam OTT Release Date

Sankranthiki Vasthunam OTT Release Date

சங்கராந்திகி வாஸ்துனம் (Sankranthiki Vasthunam)

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் சங்கராந்திகி வாஸ்துனம். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்த நிலையில் தான் திரைக்கு வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலான இந்தப் படம் இன்று மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

88
Rekhachithram OTT Release

Rekhachithram OTT Release

ரேகாசித்ரம் (Rekhachithram) 

ஜோஃபின் டி. சாக்கோ இயக்கத்தில் ஆசிப் அலி, அனஸ்வர ராஜன், மம்மூட்டி, சித்திக், சித்திக் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த படம் தான் ரேகாசித்ரம். ரூ.9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.75 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில் தான் மார்ச் 7ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
சினிமா
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved