- Home
- Cinema
- இந்த சூப்பர் ஹிட் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? பாடகர் ஜாஸ்ஸி கிஃப்டின் டாப் 10 ஹிட் சாங்ஸ்
இந்த சூப்பர் ஹிட் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? பாடகர் ஜாஸ்ஸி கிஃப்டின் டாப் 10 ஹிட் சாங்ஸ்
பாடகர் ஜாஸ்ஸி கிஃப்ட் பாடி தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாப் 10 பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Singer Jassie Gift Top 10 Tamil Hit Songs
பாடகர் ஜாஸ்ஸி கிஃப்ட் என்று சொன்னால் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்பாடிய பாடல்களின் பட்டியலை சொன்னால் இதெல்லாம் இவர் பாடிய பாடல்களா என்று கேட்பீர்கள். அந்த அளவுக்கு தமிழில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய ஒரு Underrated பாடகர் தான் இந்த ஜாஸ்ஸி கிஃப்ட். இவர் பாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பணியாற்றி இருக்கிறார். அவரின் தனித்துவமான குரலில் வெளியான டாப் 10 ஹிட் பாடல்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
4 ஸ்டூடண்ட்ஸ் இசையமைப்பாளர் ஜாஸ்ஸி கிஃப்ட்
ஜாஸ்ஸி கிஃப்ட் பாடியதில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த பாடல் என்றால் அது 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘லஜ்ஜாவதியே’ பாடல் தான். இந்த பாடலுக்கு இசையமைத்ததும் அவர் தான். அதேபோல் அந்த படத்தில் இடம்பெற்ற ‘அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட் எடுக்க’ என்கிற பாடலையும் ஜாஸ்ஸி கிஃப்ட் தான் பாடி இருந்தார். இந்த பாடல்கள் ஹிட்டான பின்னர் இவர் யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், ஹிப் ஹாப் ஆதி போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல மாஸ்டர் பீஸ் பாடல்களை பாடி இருக்கிறார்.
யுவன், ஹாரிஸ் இசையில் பாடிய ஜாஸ்ஸி கிஃப்ட்
யுவன் இசையில் வெளியான சண்டக்கோழி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கேட்டா கொடுக்குற பூமி இது’ என்கிற பாடலை பாடியது ஜாஸ்ஸி கிஃப்ட் தான். அதேபோல் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் படமான வெயிலில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பாடியதும் இவர் தான். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அண்டங் காக்கா கொண்டக்காரி’ பாடலையும் ஜாஸ்ஸி கிஃப்ட் தான் பாடி இருந்தார்.
ஜாஸ்ஸி கிஃப்ட் பாடிய ஹிட் பாடல்கள்
அடுத்ததாக விஜய்யின் சச்சின் திரைப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘குண்டு மாங்கா’ பாடலை பாடியது இவர் தான். அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த மற்றொரு சூப்பர்ஹிட் படமான சம்திங் சம்திங் படத்தில் ‘கிளியே கிளியே’ பாடலை ஜாஸ்ஸி கிஃப்ட் தான் பாடி இருந்தார். அதேபோல் வித்யாசாகர் இசையமைத்த மொழி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செவ்வானம்’ பாடலை இவர் தான் பாடி இருந்தார். அனிருத் இசையில் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக ‘பீலா பீலா’ பாடலை ஜாஸ்ஸி கிஃப்ட் தான் பாடினார். அதேபோல் கலகலப்பு 2 படத்தில் இடம்பெற்ற ‘காரைக்குடி இளவரசி’ பாடலை பாடியதும் ஜாஸ்ஸி கிஃப்ட் தான். இத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை பாடியும் அவர் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.