2 ஆவது இடத்தை பிடித்த கணவர் சூர்யா! 10 ஆவது இடத்தில் மனைவி ஜோ! 2020 ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்!
இந்த ஆண்டு, கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்கில் வெளியாகவேண்டிய பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்படி வெளியாகிய படங்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ...
முகேஷ் சாப்ரா இயக்கத்தில், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு முன் நடித்த கடைசி படமான Dil Bechara திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, தயாரித்து நடித்திருந்த 'சூரரை போற்று' திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அனுராக் பாசு இயக்கத்தில், அபிஷேக் பச்சன், ஆதித்யா ராய் கபூர், ராஜ்குமார் ராய், மற்றும் பங்கஜ் திரிபாதி முதன்மை வேடத்தில் நடித்து வெளியான 'Ludo ' திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் நடித்த காஞ்சனா படத்தின் ரீமேக், 'லட்சுமி' நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அறிமுகமானத்தில் இருந்தே திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான 'குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்' திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இயக்குனர் ஃபரூக் கபீர் இயக்கத்தில், விதியுட் ஜமால் நடிப்பில் வெளியான Khuda ஹாபிஸ் திரைப்படம், ஓடிடி தளத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட லிஸ்டில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அமிதாப்பச்சன் நடிப்பில் இயக்குனர் shoojith sircar இயக்கத்தில் வெளியான Gulabo Sitabo திரைப்படம் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
நடிகை நயன்தாரா நடித்து, தீபாவளியை முன்னிட்டு வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படம்... 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருந்தார்.