டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய, டி எம் சௌந்தர் ராஜனையே ஒரே ஒரு அறைசொல் பாடல் ஆட்டி வைத்த கதை குறித்து அவரே தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
TM Soundararajan Song
தமிழ் சினிமாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களிலும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்.. பக்தி பாடல்களையும் பாடி பிரபலமானவர் டி எம் சௌந்தர்ராஜன். 1950-களில் திரைப்படங்களில் பாட துவங்கிய இவர், மந்திரி குமாரி, கிருஷ்ணா விஜயம், தேவகி ,சர்வாதிகாரி, கல்யாணி, என 50-களில் இருந்து ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களை பாடி பிரபலமானவர்.
Legend Singer T.M.Soundararajan
இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் படங்களுக்கு தான் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதே போல் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், போன்ற ஏராளமான முன்னணி ஹீரோக்களில் படங்களுக்கு பாடியுள்ள டி.எம்.சௌந்தர்ராஜன்... ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியவர். இவர் பாடிய பத்தி பாடல்களை தான் தற்போது வரை நாம் கேட்டு ரசித்து வருகிறோம்.
என்ன ஆச்சு? நடக்க கூட முடியாமல்... பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கிவரப்பட்ட நிரோஷா!
TM Soundararajan Last Song
1950 களில் இருந்து, 1980 வரை... படு பிஸியான பாடகராக வலம் வந்த இவர் 1990-களில் சில பாடல்களை மட்டுமே பாடினார். இவர் கடைசியாக, கவிஞர் கருணாநிதி வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்கிற பாடலை தான் பாடினார். பின்னர் வயது மூப்பு காரணமாக எந்த பாடல்களையும் பாடாமல் இருந்த TMS 2013-ஆம் ஆண்டு காலமானார். பாடகர் என்பதை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ள டி.எம்.சௌந்தர் ராஜன், கலைமாமணி, பத்மஸ்ரீ, உட்பட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர்.
Oru Thalai Raham
இவ்வளவு பிரபலமான ஒருவரையே... இவர் பாடிய அறைசொல் பாடல், பதம் பார்த்து விட்டதாக அவரே தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். டி ராஜேந்தர் இயக்கத்தில், இ எம் இப்ராஹிம் தயாரிப்பில், நடிகர் சங்கர் ஹீரோவாக நடித்து 1980-ல் வெளியான திரைப்படம் 'ஒரு தலை ராகம்'. இந்த படத்தில் நடிகை ரூபா ஹீரோயினாக நடிக்க, ரவீந்தர், சந்திரசேகர், தியாகு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கண்ணே பட்டுடும்... பார்க்க அப்படியே லட்டு போல் இருக்கும் அமலா பால் மகன்! வைரலாகும் போட்டோஸ்!
1980-களில் கல்லூரி காதல் எப்படி இருந்தது என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் 'ரொமான்டிக் மியூசிக்' ஜார்னரில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு டி ராஜேந்தர் எழுத்தில், ஏ ஏ ராஜ் என்பவர் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'என் கதை முடியும் நேரம் இது' என்கிற பாடல் ஏராளமான ரசிகர்களால் இன்று வரை கேட்கப்பட்டு வரும் ஒரு பாடலாக உள்ளது. இந்த பாடலை பாடியவர் தான் டி எம் சௌந்தர் ராஜன்.
T Rajender
இந்தப் பாடலில் 'என் கதை முடியும் நேரம் இது' என்கிற அறைச்சொல்லை அதாவது (எதிர்மறை தன்மை கொண்ட) வார்த்தையை தான் டி ராஜேந்தர் எழுதியிருந்தார். இந்த பாடலை பாடியதற்கு பின்னர் தான், தனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று, டி எம் எஸ் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு முன்பு வரை ஏராளமான பாடல்களை பாடி வந்த டி எம் சௌந்தர் ராஜன், இப்பாடல் பாடிய பின்னர் தனக்கு வரும் பாடல் வாய்ப்புகள் குறைந்து... 90களில் பாட வாய்ப்பில்லாமல் இருந்ததாக கூறியுள்ளார்.
பாடல்களில் வரும் அறைச்சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து தான் MGR தன்னுடைய படங்களிலில் பெரும்பாலும் அறை சொற்களை பயன்படுத்த வேண்டாம் என கூறுவார்.