MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "விஜய் அரசியலுக்கு போனா ஒரு நஷ்டமும் இல்ல; அவர் இடத்தை நிரப்ப ஆள் இருக்கு" சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

"விஜய் அரசியலுக்கு போனா ஒரு நஷ்டமும் இல்ல; அவர் இடத்தை நிரப்ப ஆள் இருக்கு" சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

Thalapathy Vijay : தளபதி விஜய்சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்வதால், சினிமாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 11 2024, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy vijay

Thalapathy vijay

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். என்ன தான் தன்னுடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் துவக்க காலத்தில் இருந்தே மிகப்பெரிய அளவிலான கிண்டல்களையும் கேலிகளையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு தன்னுடைய அதீத திறமையால் இன்று தமிழ் சினிமாவின் தளபதி என்கின்ற பட்டத்தோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கிறார் தளபதி விஜய். பொதுவாக டாப் நடிகர்கள் ஒரே விதமான கதையைத் தான் தேர்வு செய்து நடிப்பார்கள். ஆனால் இயல்பிலிருந்து சற்று மாறி அவ்வப்போது வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களையும் ஏற்று நடிக்க தயங்காதவர் தளபதி விஜய்.

ரஜினியால் 'படையப்பா' படம் ஃபிளாப் ஆகி இருக்கும்! காப்பாற்றியது கமல் தான்.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சீக்ரெட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
TVK Vijay

TVK Vijay

இந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் விரைவில் அரசியலுக்குள் வரப் போகிறார் என்கின்ற பேச்சுக்கள் அடிபட்டது. அது மட்டுமில்லாமல் அண்மையில் வெளியான அவருடைய பல திரைப்படங்களிலும் அரசியல் வாசம் அதிக அளவில் வீசி வந்தது என்றால் அது மிகையல்ல. இந்த சூழலில் இந்த 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த அதே நேரம், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு திரையுலகில் அவரை பெரிய அளவில் ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் அவர் களமிறங்க உள்ளார்.

34
Actor Vijay

Actor Vijay

கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் சுமார் 455 கோடி ரூபாயை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக அது மாறியது. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தன்னுடைய 69வது மற்றும் இறுதி திரைப்படத்திற்கான பணிகளை அவர் தொடங்கி இருக்கிறார். பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த திரைப்படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

44
Tirupur Subramaniam

Tirupur Subramaniam

இந்த நிலையில் தளபதி விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் நிச்சயம் திரைத்துறைக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். "விஜய் அரசியலுக்கு போனால் என்ன? விஜயை தாண்டி வசூல் கொடுக்க இங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். விஜய் இடத்துக்கு வரவும் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சினிமா எப்போதுமே ஒருவரை நம்பியே இருக்காது. ஒருவர் போனால் மற்றொருவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதனால் விஜய் சினிமாவை விட்டு போனதும் அது ஒன்றும் பெரிய இழப்பாக எங்களுக்கு இருக்காது" என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

அட்ட பிளாப் படத்தையும் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை; பாட்டுக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள் எது?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved