MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினியால் 'படையப்பா' படம் ஃபிளாப் ஆகி இருக்கும்! காப்பாற்றியது கமல் தான்.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சீக்ரெட்!

ரஜினியால் 'படையப்பா' படம் ஃபிளாப் ஆகி இருக்கும்! காப்பாற்றியது கமல் தான்.. கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சீக்ரெட்!

படையப்பா படம் குறித்து, அண்மையில் கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த படத்தை காப்பாற்றியதே உலக நாயகன் கமல்ஹாசன் தான் என தெரிவித்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 11 2024, 06:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Padayappa Movie

Padayappa Movie

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த்தையே மிரட்டும் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அசத்தி இருந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரஜினிகாந்துக்கு அப்பாவாகவும், லக்ஷ்மி அம்மாவாகவும் நடித்திருந்தார். இவர்களைத் தவிர சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Padayappa Rajinikanth

Padayappa Rajinikanth

இந்தத் திரைப்படம் வெளியாகி சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில், இந்த திரைப்படம் ஒருவேளை ரஜினிகாந்தின் ஐடியாவை கேட்டிருந்தால், பிளாப் ஆகி இருக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்காமல் காப்பாற்றியது நடிகர் கமலஹாசன் தான் என அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வினை ஆனது! பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை - முட்டி மோதும் போட்டியாளர்கள்!

36
KS Ravikumar About Rajinikanth

KS Ravikumar About Rajinikanth

படையப்பா படப்பிடிப்பு முடிந்த பின்னர் பின்னர், ரஜினிகாந்துக்கு... கே எஸ் ரவிக்குமார் படத்தை போட்டு காட்டியுள்ளார். மொத்தம் இருந்த 19 ரீல்களையும் பார்த்துவிட்டு எல்லாமே நன்றாக இருக்கிறது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் ஒரு படத்தில் 14 ரீல்ஸ் தான் இருக்க வேண்டும். எனவே இந்த படத்தின் காட்சிகளை மீண்டும் குறைத்து கிரிஸ்ப்பாக மாற்ற வேண்டும் என, கே எஸ் ரவிக்குமார் கூற... இதற்கு ரஜினிகாந்த் அதை பார்த்துக் கொள்ளலாம் என கூறியதோடு, படத்தில் எல்லா சீனுமே நல்லாதானே இருக்கு எதற்கு காட்சிகளை நீக்க வேண்டும் என கே.எஸ்.ரவிகுமாரிடம் விவாதம் செய்வது போல் பேசியுள்ளார்.
 

46
Kamalhaasan Save the Padayappa Movie

Kamalhaasan Save the Padayappa Movie

பின்னர், ஆனால் கொஞ்சம் நேரம் ஆன மாதிரி இருக்கு, டைம் என்ன என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். இதற்க்கு கே எஸ் ரவிக்குமார் டைம் எதுக்கு சார் பாக்கணும். இதுல மொத்தம் 19 ரிலீஸ் இருக்கு... என கூறி ஐந்து ரீல்களை படத்தில் இருந்து குறைக்க வேண்டும் என மீண்டும் கூறியதற்கு, "19 ரீலிஸ் எல்லாம் தாங்காதே...  என யோசித்தபடியே, வேண்டுமென்றால் 2 இன்டர்வெல் விட்டுவிடலாமா என கேட்டுள்ளார். இதற்கும் கே எஸ் ரவிக்குமார் அதெல்லாம் வேண்டாம் சார், என மறுத்து பேச அதற்கு ரஜினிகாந்த் ரீசண்டாக ஒரு ஹிந்தி படத்தில் கூட இரண்டு இன்டர்வெல் இருந்தது என படத்தில் உள்ள காட்சிகளை நீக்க மனம் இல்லாமல் பேசினாராம்.

சுச்சுவேஷன் தெரியாமல்.. சோக பாட்டை சிரித்து கொண்டே பாடிய SPB! எந்த பாடல் தெரியுமா?

56
KS Ravikumar About Secret

KS Ravikumar About Secret

இதைத் தொடர்ந்து கமலஹாசன் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசியபோது,  ரஜினிகாந்த் 19 ரீல்கள் 'படையப்பா' படத்தில் உள்ளதையும், இயக்குனர் இரண்டு இன்டர்வல் வேண்டாம் எனக் கூறி... படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என சொல்கிறார் என கூறியதாக தெரிவித்துள்ளார். உடனே கமல்ஹாசன் இயக்குனர் சொல்வதை கேட்கும் படியும், தமிழ் படத்திற்கு இரண்டு இன்டர்வெல் கான்செப்ட் ஒத்து வராது என்கிற எதார்த்தத்தை கூறி ரஜினிக்கு புரிய வைத்தாராம்.
 

66
Padayappa Super hit

Padayappa Super hit

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மறுநாள் இயக்குனர் ஏ எஸ் ரவிக்குமாரை சந்தித்து, படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க சம்மதம் என தெரிவித்துள்ளார். பின்னர்  ரஜினிகாந்திடம் நான்கு நாட்கள் டைம் வாங்கி இரவு பகலாக 19 ரீலிஸாக இருந்த 'படையப்பா' படத்தை 14 ரீலிசாக மாற்றி,  பின்னர் இந்த படம் வெளியானது. எனவே இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கமலஹாசன் தான் என்றும், ரஜினிகாந்த் சொன்னது போல் ஒரு வேலை இரண்டு இன்டர்வெல் விட்டு 19 ரீல்ஸையும் படமாகக் கொண்டு வந்திருந்தால் படு தோல்வியை சந்தித்திருக்கும் என கூறியுள்ளார்.

காசு கொடுத்து வாங்குறதுக்கு சமம்; கோவத்தின் உச்சத்தில் தேசிய விருதை மறுத்த வாலி!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ரம்யா கிருஷ்ணன்
சௌந்தர்யா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved