MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தக் லைஃப் முதல் குபேரா வரை; ஜூன் மாதம் மட்டும் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?

தக் லைஃப் முதல் குபேரா வரை; ஜூன் மாதம் மட்டும் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?

மே மாதம் பல வெற்றிப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், அடுத்ததாக ஜூன் மாதம் என்னென்ன படங்கள் திரைக்கு வருகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 29 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
June Month Release Movies
Image Credit : Google

June Month Release Movies

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மே மாத இறுதியில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மறுபுறம் ஜூன் மாதம் வரிசையாக பிரம்மாண்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

25
தக் லைஃப்
Image Credit : Twitter

தக் லைஃப்

ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மாஸ்டர் பீஸ் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் பணியாற்றி உள்ளார். தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Related Articles

Related image1
Kuberaa Release Date: அதிகாரத்தின் பவர் - பணத்திற்கான போராட்டம்; தனுஷின் குபேரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Related image2
Thug Life: தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
35
குபேரா
Image Credit : Google

குபேரா

தக் லைஃபை தொடர்ந்து தமிழில் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

45
மார்கன்
Image Credit : Google

மார்கன்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள மார்கன் திரைப்படமும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ப்ரீத்திகா, பிரிகிடா, தீப்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.

55
ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
Image Credit : our own

ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

அக்‌ஷய் குமார் நடித்துள்ள ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் வருகிற ஜூன் 6-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அமீர் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் சிதாரே ஜமீன் பார் திரைப்படம் ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. கஜோல் நடித்துள்ள மா என்கிற இந்தி படம் வருகிற ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

தெலுங்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் வருகிற ஜூன் 12ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடித்துள்ள கண்ணப்பா என்கிற பிரம்மாண்ட திரைப்படம் வருகிற ஜூன் 27ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக் லைஃப்
தனுஷ்
கமல்ஹாசன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
Recommended image2
சந்திரகலா விரித்த வலை.. தானாக வந்து சிக்கிய கார்த்திக்! புதையலையும் அலேக்காக ஆட்டைய போட்ட வில்லி - கார்த்திகை தீபம் அதிரடி சீன்!
Recommended image3
Thaai Kizhavi: மனதிற்கு நெருக்கமான ஒரு மாஸ்டர்பீஸ்.! 'தாய் கிழவி'யை உச்சிமுகர்ந்த இயக்குநர் ஷங்கர்!
Related Stories
Recommended image1
Kuberaa Release Date: அதிகாரத்தின் பவர் - பணத்திற்கான போராட்டம்; தனுஷின் குபேரா ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Recommended image2
Thug Life: தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved