MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 1000 கோடி வசூல் தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது ஏன்? மணிரத்னம் விளக்கம்

1000 கோடி வசூல் தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது ஏன்? மணிரத்னம் விளக்கம்

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை எட்டிவிட்ட நிலையில், தமிழில் ஒரு படம் கூட அந்த மைல்கல்லை எட்டவில்லை.

2 Min read
Author : Ganesh A
Published : May 26 2025, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maniratnam About 1000 Crore Box Office
Image Credit : X

Maniratnam About 1000 Crore Box Office

தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய மெளன ராகம், நாயகன், தளபதி போன்ற படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக் படங்களாக உள்ளன. இந்த நிலையில், இவர் தற்போது சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மணிரத்னத்தின் தக் லைஃப்
Image Credit : Twitter

மணிரத்னத்தின் தக் லைஃப்

தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தக் லைஃப் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Articles

Related image1
'தக் லைஃப்' திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்
Related image2
‘தக் லைஃப்’ படத்திற்குப் பின்னர் மணிரத்னம் இயக்கும் படம்.! நடிகர்கள் இவர்கள்தானா?
34
1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
Image Credit : GOOGLE

1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் புரமோஷனுக்காக நீயா நானா கோபிநாத் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார் மணிரத்னம். அப்போது நிறைய சுவாரஸ்ய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதிலும் குறிப்பாக தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் 1000 கோடி வசூலை எட்டிவிட்ட நிலையில், ஏன் தமிழ் சினிமா 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டவில்லை என்கிற கேள்விக்கு மணிரத்னம் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

44
மணிரத்னம் அளித்த நச் பதில்
Image Credit : Twitter

மணிரத்னம் அளித்த நச் பதில்

இதற்கு மணிரத்னம் கூறியதாவது : “நல்ல படங்கள் கொடுப்பது முக்கியமா அல்லது பாக்ஸ் ஆபிஸ் வசூல் முக்கியமா? முன்னர், மக்கள் படத்தின் தரத்தை பற்றி யோசித்தார்கள். ஆனால் தற்போது படங்களின் கலெக்‌ஷனை நோக்கி திரும்பி இருக்கிறார்கள். இந்த டிரெண்ட் படங்களின் தரத்தை குறைத்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன். நான் ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் என்கிற சிந்தனையில் படத்தை எடுக்க மாட்டேன்” என மணிரத்னம் கூறி உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக் லைஃப்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Related Stories
Recommended image1
'தக் லைஃப்' திரைப்படம் பற்றி பலருக்கும் தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்
Recommended image2
‘தக் லைஃப்’ படத்திற்குப் பின்னர் மணிரத்னம் இயக்கும் படம்.! நடிகர்கள் இவர்கள்தானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved