"என்னடா படம் எடுக்குறீங்க"? 'தக் லைஃப்' படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்
‘தக் லைஃப்’ திரைப்படம் குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
‘தக் லைஃப்’ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி போன்ற மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் தற்போது ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் தனது பாணியில் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த ‘தக் லைஃப்’
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மணிரத்னம் ‘தக் லைஃப்’ படத்தின் மூலமாக மீண்டும் இணைந்து இருந்தனர். கேங்ஸ்டர் கதை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக இருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கேங்ஸ்டருக்கான எந்த கதையும் இல்லை
படம் குறித்து விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், சிம்புவின் தந்தை சுட்டுக் கொல்லப்படுவதால் அவரை கமல் எடுத்து வளர்க்கிறார். சிம்புவின் தங்கையை கண்டுபிடித்து தருவதாகவும் சிம்புவுக்கு சத்தியம் செய்கிறார். சிம்புவின் தங்கை சந்திரவை தேடிச்செல்லும் கமலுக்கு சந்திரா கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இந்திரா (திரிஷா) கிடைக்கிறார். இந்திராவுடன் கமல் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்திராவை அடைவதற்காக சிம்புவும் போட்டி போடுகிறார். இந்திராவை அடைய கமலுக்கும், சிம்புவுக்கும் நடக்கும் போட்டி தான் இந்த படத்தின் கதை. இதை கேங்ஸ்டர் படம் என்று கூறுகிறார்கள். ஆனால் கேங்க்ஸ்டருக்கான எந்த சீனும் படத்தில் இல்லை.
கேங்ஸ்டர் படம் என்பதை நம்ப வைக்க ஒரு சீன் கூட இல்லை
படம் ஒரு கேங்ஸ்டர் கதை என்பதை படத்தை எடுத்தவர்களே நம்பவில்லை. அதற்கான கதையும் இல்லை. கேங்ஸ்டர் என்பதை நம்ப வைப்பதற்கான ஒரு சீன் கூட படத்தில் இல்லை. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. படத்தில் கொஞ்சமும் லாஜிக் இல்லை. கமல் ஜெயிலுக்கு போனால் அங்க கூட திரிஷா வந்து விடுகிறது. ஜெயலில் கூட திரிஷாவுடன் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு ஏதாவது ஆக்ஷனில் இறங்குவார் என்று பார்த்தால், நேராக திரிஷா வீட்டுக்கு போய் நான்கு நாட்கள் தங்கி விட்டு, அதன் பின்னர் அபிராமி வீட்டிற்கு செல்கிறார். அங்கு போயும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இதில் எங்கு கேங்ஸ்டர் கதை வந்தது?
ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ப்ளூ சட்டை மாறன் கேள்வி
பேரன் பேத்தி எடுத்த வயதில் கராத்தே கற்றுக் கொண்டு வந்து அப்புறம் தான் கேங்ஸ்டர் என்பது போல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தீ பாடிய “முத்த மழை..” பாடல் படத்திலேயே இல்லை. படம் முடியும்பொழுது “விண்வெளி நாயகா..” பாடல் ஒலிக்கிறது. விண்வெளிக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு? அவர் என்ன கல்பனா சாவ்லாவுக்கு சித்தப்பா பையானா? சுனிதா வில்லியம்ஸ்க்கு பெரியப்பாவா? என்னதான் படம் எடுக்குறானுங்க? ஏதாவாது ஒரு லாஜிக் இருக்கிறதா? புலி மார்க் சீயக்காய் தூளில் புலிக்கும் சீயக்காய்க்கும் என்ன சம்பந்தம்? அது போல் தான் இந்த சம்பந்த்தமும் இருக்கிறது.
We Stand With Simbu - கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்
படத்தை கேங்ஸ்டர் என்கிறார்கள், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை? அந்த கேங்ஸ்டருக்குள் சண்டை என்கிறார்கள், என்ன சண்டை என்பதே தெரியவில்லை. இந்த கேங்ஸ்டரிலேயே ஷார்ப்பான ஆள் சிம்பு தான் என்கிறார்கள். அவர் என்ன ஷார்ப்பான வேலை பார்த்தார் என்பதும் தெரியவில்லை. சிலர் சிம்புவுக்கு இது ஒரு கம் பேக், கமலுக்கு ஒரு கம் பேக் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இதை நம்பி போனீர்கள் என்றால் உங்களுக்கு ஜிங்குச்சா தான். கன்னட மொழி பிரச்சனையில் அனைவரும் ‘We Stand With Kamal’ என்று கூறினார்கள். படத்தில் சிம்பு கேட்பது ஒரு ஹீரோயினாவது எனக்கு கொடுங்கள் என்பது தான். நியாயப்படி பார்த்தால் ‘We Stand With Simbu’ என்று தான் சொல்ல வேண்டும்." என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை கூறினார்.