புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்..!
2025க்கு விடை கொடுத்து 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இந்த வாரம் ஓடிடியில் சில புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

New Year Special OTT Release
லவ் பியாண்ட் விக்கெட்
விக்ராந்த், நியதி காதம்பி, தேனி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தமிழ் ஸ்போர்ட்ஸ் டிராமா தொடரை 'அ டெலி ஃபேக்டரி' தயாரித்துள்ளது. தோல்வியுற்ற கிரிக்கெட் வீரர், பயிற்சியாளராக மாறி இளம் வீரர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றினார் என்பதே கதை. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜனவரி 1 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
எக்கோ
மலையாள மிஸ்டரி த்ரில்லர் 'எக்கோ'. ரகசிய புலனாய்வாளர்கள், பழைய எதிரிகள் மற்றும் மர்மங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் கதை. பயிற்சி பெற்ற நாய்களின் பாத்திரம் கதைக்கு திகிலூட்டுகிறது. தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ளார். சந்தீப் பிரதீப், வினீத், நரேன் ராம் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 31ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்
ஹக்
1985 ஷா பானு வழக்கை அடிப்படையாகக் கொண்ட கோர்ட்ரூம் டிராமா. யாமி கௌதம் நடித்த பாத்திரம், தனது உரிமைக்காக உச்ச நீதிமன்றம் வரை போராடுகிறது. முஸ்லிம் குடும்பங்களின் திருமணப் பிரச்சினைகளை இது பேசுகிறது. இது ஜனவரி 2ந் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.
ரன் அவே
இது ஒரு பிரிட்டிஷ் த்ரில்லர் வெப் சீரிஸ். ஜேம்ஸ் நெஸ்பிட், எல்லி டி லாங், ரூத் ஜோன்ஸ், ஆல்பிரட் எனோக் ஆகியோர் நடித்துள்ளனர். நிமர் ரஷீத், இஷார் சஹோதா இயக்கியுள்ளனர். போதைக்கு அடிமையான மகளைக் காப்பாற்ற ஒரு தந்தை எவ்வளவு தூரம் செல்வார் என்பதே கதை. குற்ற உலகம், குடும்ப ரகசியங்கள் எனத் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது. இது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 1ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
இத்திரி நேரம்
இது ஒரு மலையாள ரொமான்டிக் டிராமா படம். ரோஷன் மேத்யூ, ஸரீன் ஷிஹாப் நடித்துள்ளனர். பிரசாந்த் விஜய் இயக்கியுள்ளார்.கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒரு இரவுப் பயணத்தின் மூலம் 'முன்னேறிச் செல்வது' என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. இது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் டிசம்பர் 31ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
சீட்டாஸ் அப் க்ளோஸ் வித் பெர்டி கிரிகோரி
இது ஒரு அமெரிக்க ஆவணத் தொடர். ஜிகர் கணத்ரா இயக்கியுள்ளார். இதில் பெர்டி கிரிகோரி, தான்சானியாவில் சிறுத்தைகளைப் படம்பிடிப்பதை காணலாம். உலகின் வேகமான நில விலங்குகளான சிறுத்தைகளின் வாழ்க்கை போராட்டத்தை காட்டும் நேஷனல் ஜியாகிரபிக் ஆவணப்படம். இது ஜனவரி 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
புத்தாண்டு ஓடிடி வெளியீடுகள்
மோக்லி (Mowgli)
காடுகளில் வளர்ந்த இளைஞன், காதல் மற்றும் காவல் துறையின் கொடுமைக்கு இடையே நடக்கும் போராட்டமே 'மோக்லி'. இது ஒரு தெலுங்கு ஆக்ஷன் அட்வென்ச்சர் படம். ரோஷன் கனகலா, சாக்ஷி மஹ்தோல்கர் நடித்துள்ளனர். சந்தீப் ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் ஜனவரி 1 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 (இறுதி)
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இறுதி சீசன். இரண்டு மணி நேர கிளைமாக்ஸுடன், 1983 முதல் தொடரும் பயணத்திற்கு உணர்ச்சிகரமான முடிவைக் கொடுக்க உள்ளது. வினோனா ரைடர், மில்லி பாபி பிரவுன் நடித்துள்ளனர். இதுவும் நெட்பிளிக்ஸில் ஜனவரி 1ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

