இளையராஜா தலைமையில் அறிவு - கல்பனா திருமணம்! திருமாவிடம் வாழ்த்து!
Therukural Arivu Wedding: தெருக்குரல் அறிவு, காதலி கல்பனா அம்பேத்கரை திருமணம் செய்துகொண்டார். இளையராஜா தலைமையில் திருமணம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.
Therukural Arivu Wedding Photos
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. அவர் எழுதிய 'உரிமையை மீட்போம்' என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விஜய் நடித்த 'மாஸ்டர்' படதில் 'வாத்தி ரெய்டு' பாடல் மூலம் பரவலாக அறியப்பட்டார். தனுஷ், ஜீவா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் பாடலாசிரியராகவும் பின்னணிப் பாடகராகவும் பங்களித்துள்ளார்.
Enjoy Enjaami Arivu Song
சினிமாவுக்கு அப்பால் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி ஏராளமான இசை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம் அறிவுக்கு புதிய வாய்ப்புகள் வந்தன. வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
Therukural Arivu and Kalpana Ambedkar
இந்நிலையில் தெருக்குரல் அறிவு தன் காதலி கல்பனா அம்பேத்கரை இன்று திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் இருவரின் திருமணம் நடந்தது. இசைஞானி இளையராஜாவே திருமணத்துக்குத் தலைமை தாங்கினார்.
Therukural Arivu with Ilayaraja
பின்னர், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அம்பேத்கர் பற்றிய பாடல் ஒன்றை அறிவு பாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Arivu Kalpana Wedding
தெருக்குரல் அறிவு, கல்பனா அம்பேத்கரைக் காதலிப்பதாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார். கல்பனா அம்பேத்கர், ஆண்டுதோறும் நடக்கும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.