- Home
- Cinema
- தலைவன் தலைவி முதல் மாரீசன் வரை; ஜூலை 25ல் தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட் இதோ
தலைவன் தலைவி முதல் மாரீசன் வரை; ஜூலை 25ல் தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட் இதோ
விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி முதல் பகத் பாசிலின் மாரீசன் வரை ஜூலை 25ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

July 25 Theatre and OTT Release Movies
ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் இதுவரை வெளியாகவில்லை. மூன்று வாரங்கள் கடந்தும் சின்ன பட்ஜெட் படங்கள் தான் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஜூலை மாதத்தின் நான்காவது வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் அணிவகுத்து வருகின்றன. ஜூலை 25ந் தேதி தமிழ்நாட்டில் என்னென்ன படங்கள் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகின்றன என்பதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, தீபா, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பக்கா பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான இது வருகிற ஜூலை 25ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
மாரீசன்
சுதீஸ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மாரீசன். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். மாரீசன் திரைப்படம் ஒரு பயணம் சம்பந்தப்பட்ட படமாகும். இப்படத்தில் கோவை சரளா, லிவ்விங்ஸ்டன், விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் ஜூலை 25ந் தேதி அன்று திரைக்கு வர உள்ளது.
ஹரி ஹர வீர மல்லு
ராதாகிருஷ்ணா ஜகர்லமுடி இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஆதித்யா மேனன், பாபி தியோல், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 24ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஓடிடியில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து இசையமைத்திருந்த மார்கன் திரைப்படம் வருகிற ஜூலை 25ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் திரைப்படமும், விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியன் நடிப்பில் வெளியான படைத் தலைவன் திரைப்படமும் ஜூலை 25-ந் தேதி முதல் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.