அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! யார்..? எதற்காக..? வெளியான பரபரப்பு காரணம்..!
தல அஜித் (Thala Ajith) வீட்டின் முன்பு பெண் ஒருவர் திடீர் என தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தல அஜித்துக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான். எனவே அவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் வைரல் ஆகி விடுகிறார்கள்.
சமீபத்தில் கூட அஜித், ரஷ்யாவை பைக் ரைடு செய்தது முதல், தாஜ் மகாலுக்கு சென்று வந்தது, மற்றும் உலகம் சுற்றிய இளம் பெண் மாரல் யார்சலுவுடன் புகைப்படம் எடுத்து கொண்டது வரை சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டது.
ஊருக்கு தெரியாமல் பலருக்கு உதவி செய்து வரும் அஜித் தனக்கு உதவ முன்வரவில்லை என கூறி 29 வயதாகும் பர்சனா என்ற பெண் அஜித்தின் வீட்டு முன்பு தீ குளிக்க முயன்ற சம்பவம், திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்தின் தீவிர ரசிகையாக இவர், பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில், அஜித் எதேர்சையாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதைக் கண்டதும் உற்சாகமடைந்த பர்சனா அவருடன் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் இவரது செல்போனை பாதுகாப்பு அதிகாரிகள் பிடுங்கிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் பர்சனாவிடம் செல்போனை அவர்கள் கொடுத்து விட்ட போதிலும் அந்த வீடியோ வெளியே கசிந்தது.
Ajith Shalini
எனவே அஜித் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாரா? என்ற கேள்விகளுடன் அஜித்தின் பரிசோதனை வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் தவறான தகவலை வீடியோவாக எடுத்து வெளியிட்ட பர்ஜானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. பின்னர் அஜீத் மனைவி ஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அவரை மருத்துவமனை பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது.
எனினும் எந்த ஒரு வேலையும் செய்யாமல் அவரை அலைக்கழித்த பின் பணியிடை நீக்கம் செய்துள்ளது. பர்ஜானா பணியிடம் நீக்கம், அஜித் விவகாரத்திற்க்காக செய்யப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், இதுவும் ஒரு காரணம் தான் என பர்சனா கூறுகிறார்.
இதன் காரணமாக கடந்த வயதான தாய் மற்றும், குடும்பத்தினரை கவனிக்க முடியாமலும் இருப்பதாகவும். நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்து தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டபோது, அவர் அஜித்திடம் பேசி உதவுவதாக கூறி பின்னர் முடியாது என மறுத்ததாகவும் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த பர்ஜானா தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்திற்கு பின், தனக்கு நிலையான வேலை கிடைக்காமல் அவஸ்தை பட்டு வந்த பர்சனா தற்போது, அஜித்தின் வீட்டு முன்பு தீ குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.