MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • T Rajendar Songs: 20 படங்களையும் ஓரங்கட்டிய பாடல்கள்.! இளையராஜா ஆதிக்கத்துக்கு நடுவே மெகா ஹிட் அடித்த டி.ராஜேந்தர் படம்.

T Rajendar Songs: 20 படங்களையும் ஓரங்கட்டிய பாடல்கள்.! இளையராஜா ஆதிக்கத்துக்கு நடுவே மெகா ஹிட் அடித்த டி.ராஜேந்தர் படம்.

இளையராஜா ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் 20 படங்களையும் ஓரங்கட்டிய பாடல்கள் மூலம் மெகா ஹிட் அடித்த டி.ராஜேந்தர் படத்தின் சுவாரஸ்யமான பின்னணி மற்றும் இசை வெற்றியைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 23 2026, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மெய் மறக்கச்செய்த TR பாடல்கள்
Image Credit : Asianet News

மெய் மறக்கச்செய்த TR பாடல்கள்

ஒரு காலத்தில் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க கதையை விட பாடல்களுக்கே மிகப்பெரிய பங்கு இருந்தது. அதிலும் 1980-களின் தொடக்கம் என்றால், தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் பெயர் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த காலகட்டம். இப்படியான சூழலில், பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லாமல், புதுமுகங்களை மையமாக வைத்து உருவான ஒரு திரைப்படத்தின் பாடல்கள் மட்டும் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அந்தப் படம் தான் ‘ஒரு தலை ராகம்’
Image Credit : X

அந்தப் படம் தான் ‘ஒரு தலை ராகம்’

1980-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் டி. ராஜேந்தரின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான தொடக்கப் படமாக அமைந்தது ‘ஒரு தலை ராகம்’. படத்தின் கதை, காதல், கல்லூரி வாழ்க்கை என அனைத்தையும் தாண்டி ரசிகர்களிடம் முதலில் சென்று சேர்ந்தது அதன் பாடல்கள்தான். 2 மே 1980 அன்று வெளியான இப்படம் பின்னர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

35
இசையமைப்பாளர் மட்டுமல்ல... பாடலாசிரியரும் டி.ராஜேந்தர்!
Image Credit : youtube/web

இசையமைப்பாளர் மட்டுமல்ல... பாடலாசிரியரும் டி.ராஜேந்தர்!

‘ஒரு தலை ராகம்’ படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமே, அதன் பாடல்களை எழுதி இசையமைத்தவர் டி. ராஜேந்தர் என்பதுதான். அப்போது பெரிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில், முற்றிலும் வேறுபட்ட இசை அணுகுமுறையுடன் அவர் உருவாக்கிய பாடல்கள் இளைஞர்களிடம் வேகமாகப் பிரபலமானது.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் காதல், ஏக்கம், தனிமை, மனக்குமுறல் போன்ற உணர்வுகளை நேரடியாகப் பேசின. அதனால்தான் கல்லூரி மாணவர்கள் முதல் காதலை அனுபவித்த இளைஞர்கள் வரை பலருக்கும் இந்தப் பாடல்கள் தங்களுடைய கதையைப் போலவே தோன்றின.

மறக்க முடியாத பாடல்கள்

‘ஒரு தலை ராகம்’ படத்தின் பாடல் பட்டியலில், ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’ ‘வாசம் இல்லாத மலர் இது’ ‘கடவுள் வாழும் கோயிலிலே’ ‘கூடையிலே கருவாடு’ ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ஆகிய பாடல்கள் இடம்பெற்றன.

இதில் ‘வாசமில்லா மலரிது’ பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலின் வரிகளும் இசையும் டி. ராஜேந்தருடையது. ‘கடவுள் வாழும் கோயிலிலே’ பாடலை பி. ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். குறிப்பாக ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ பாடல் எஸ்.பி.பி.யின் குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்களில் ஒன்றாக மாறியது.

45
அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் பாடல்கள்
Image Credit : X

அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் பாடல்கள்

1980-ல் இளையராஜா ஏற்கனவே தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக உருவெடுத்திருந்தார். அந்த ஆண்டில் வெளியான அவரது படங்களில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க பாடல்கள் சில:

  • ஆயிரம் வாசல் இதயம் – ‘கிச்சு கிச்சு தாம்பலம்’, ‘மகராணி உன்னைத் தேடி’ ரிஷிமூலம் – ‘நெஞ்சில் உள்ள’, ‘நேரமிது நேரமிது’
  • அன்புக்கு நான் அடிமை – ‘காத்தோடு பூவுரச’, ‘காட்டிலோடு சிங்கக்குட்டி’ எல்லாம் உன் கைராசி – ‘சேரிக்கு சேவை’
  • கிராமத்து அத்தியாயம் – ‘வாடாத ரோசாப்பூ’ குரு – ‘ஆடுங்கள் பாடுங்கள்’, ‘பேரைச் சொல்லவா’
  • காளி – ‘பத்ரகாளி உத்தமா’
  • ஜானி – ‘செனோரிட்டா ஐ லவ் யூ’
  • நதியை தேடி வந்த கடல் – ‘எங்கேயோ ஏதோ’
  • ஓரே முத்தம் – ‘ஆத்தங்கரையில் ஒரு’, ‘ராஜா பொண்ணு ஆடி வா’
  • நிழல்கள் – ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’

1980-ம் ஆண்டுடில் இளையராஜா இசையமைத்த பல படங்கள் ஹிட் அடித்து இருந்தாலும் டி ராஜேந்தர் அதனை ஓரங்கட்டியது சினிமா அதிசயம் என கூறப்படகிறது. ‘ஜானி’, ‘மூடுபனி’, ‘எல்லாம் உன் கைராசி’, ‘நிழல்கள்’, ‘குரு’, ‘முரட்டுக்காளை’ உள்ளிட்டவை அந்த ஆண்டின் அவரது முக்கியமான படங்களாகும்.

55
ஏன் ‘ஒரு தலை ராகம்’ இவ்வளவு பேசப்பட்டது?
Image Credit : Google

ஏன் ‘ஒரு தலை ராகம்’ இவ்வளவு பேசப்பட்டது?

இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பெரிய பட்ஜெட் அல்லது பிரம்மாண்ட நட்சத்திர பலம் இல்லாத ஒரு திரைப்படம் தனது பாடல்களின் மூலமாக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதான் ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தனிச்சிறப்பு.

பாடல்களில் இருந்த எளிமை, இளைஞர்களின் மனநிலையை பிரதிபலித்த வரிகள், காதலின் சொல்லப்படாத வலியை வெளிப்படுத்திய இசை ஆகியவை படத்திற்கு தனி அடையாளத்தை உருவாக்கின.

அதனால்தான் இன்று பல தசாப்தங்கள் கடந்த பிறகும் ‘ஒரு தலை ராகம்’ என்ற பெயர் வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் கதை மட்டுமல்ல... அந்த காலத்து இளைஞர்களின் மனதை நேரடியாகத் தொட்ட அந்தப் பாடல்கள்தான்!

ஒரு புதிய கலைஞர், தனக்கே உரிய இசை மொழியில் உருவாக்கிய பாடல்கள், அன்றைய இசை சூழலில் தனி பாதையை உருவாக்கிய கதை இது. அதனால்தான் ‘ஒரு தலை ராகம்’ தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசைப் படைப்புகளில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டி. ராஜேந்தர்
சினிமா காட்சியகம்
சினிமா
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!
Recommended image2
OTT Releases : டாக்ஸிக் முதல் ஹபீபி வரை... ஓடிடியில் இந்த வாரம் ஸ்ட்ரீம் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்
Recommended image3
Dhanush : இயக்குநர் தனுஷுக்கு கிடைத்த முதல் தேசிய விருது... டபுள் சந்தோஷத்தில் ரசிகர்கள்
Related Stories
Recommended image1
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Recommended image2
Songs: சொன்னது நீதானா?! பாடல் மூலம் கேள்வி கேட்ட கண்ணதாசன்.! பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டான பாட்டு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved