அள்ளுது அள்ளுது. நெல்லை மொத்தமா தூக்குது.. அஞ்சு மணிக்கு தியேட்டரில் குவிந்த மக்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் அதே வேளையில், சில நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து திரையரங்கை கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம் கூலி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு பான்-இந்திய திரைப்படமாக கூலி அமைந்துள்ளது. இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171-வது படமாகும்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் (ஆகஸ்ட் 14) இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ், செளபின் ஷாஹிர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.
கூலி திரைப்படம் உலகளவில் 4500 முதல் 5000 திரைகளில் வெளியாகியுள்ளது. முன்பதிவில் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து, விஜய்யின் லியோ படத்தின் முன்பதிவு சாதனையை முறியடித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் முதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, குறிப்பாக அவரது இளமைத் தோற்றமும், கம்பீரமான ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நடிகர் நாகார்ஜுனாவின் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக உள்ளதாகவும் பாராட்டப்படுகிறது. அமிர் கானின் சிறப்புத் தோற்றம் திரையரங்கை அதிர வைத்ததாக கூறப்படுகிறது.
கூலி திரைப்படத்தில் இடைவேளைக்கு முந்தைய திருப்பம் மற்றும் இரண்டாம் பாதியின் வேகமான சண்டை காட்சிகள் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்வதாக ரசிகர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.
இதே போல படத்தில் நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நாகார்ஜுனாவின் கதாபாத்திர வடிவமைப்பு சரியாக இல்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் தியேட்டர் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது..நெல்லையில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டி பால் அபிஷைகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள்.