- Home
- Cinema
- பல நாடுகளில் தடை செய்யும் அளவுக்கு பயங்கரமா இருக்கும்... ஆஸ்கர் வென்ற ‘இந்த’ திகில் படத்தை பற்றி தெரியுமா?
பல நாடுகளில் தடை செய்யும் அளவுக்கு பயங்கரமா இருக்கும்... ஆஸ்கர் வென்ற ‘இந்த’ திகில் படத்தை பற்றி தெரியுமா?
ஆஸ்கர் விருதை வென்ற ஒரே திகில் படம் என்கிற பெருமையை பெற்ற திரைப்படம் பல நாடுகளில் தடை செய்யும் அளவுக்கு செம த்ரில்லிங்காக இருக்குமாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

Oscar Winning Horror Film
காமெடி, ஆக்ஷன், ரொமான்டிக் மற்றும் குடும்பப் படங்களின் பார்வையாளர்கள் ஒருபுறம் என்றால், திகில் படங்களுக்கான ரசிகர் பட்டாளம் மிகவும் பெரியது. பெரும்பாலானோர் பயத்துடனேயே திகில் படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். திகில் படங்களில் திரில்லிங்கான சஸ்பென்ஸ் இருப்பதால் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும். கோலிவுட்டிலும் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளதால், அதனை பிரான்சைஸ் ஆக உருவாக்கி, தொடர்ச்சியாக அதில் படங்கள் வந்த வண்ணம் உள்ளன. இன்று நாம் பார்க்கப்போவதும் மிகவும் பயங்கரமான ஒரு திகில் படத்தைப் பற்றிதான்.
மிரள வைக்கும் திகில் படம்
ஹாலிவுட், திகில் படங்களைத் தயாரிப்பதில் பிரபலமானது. ஹாலிவுட் திரைப்படங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிரபலம். ஹாலிவுட் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இன்று நாம் பேசும் திரைப்படத்தை கடந்த 50 ஆண்டுகளில் யாரும் எடுத்ததில்லை. படத்தின் பயங்கரத்தைக் கண்டு பல நாடுகள் இந்தப் படத்தைத் தடை செய்தன. ஆனால் இன்று ஆன்லைனில் இந்தப் படத்தை மக்கள் பார்க்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம்
ஆஸ்கர் விருதை வென்ற ஒரே திகில் படம் 'தி எக்ஸார்சிஸ்ட்' (The Exorcist). இதன் பயங்கரத்தின் தீவிரம் காரணமாக, இந்தப் படம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. IMDb இந்தப் படத்திற்கு 8.2 மதிப்பீடு வழங்கியுள்ளது. 'தி எக்ஸார்சிஸ்ட்' திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் பல நாட்டு பார்வையாளர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனால், இந்தப் படத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக பயங்கரமான திகில் படம் என்று 'தி எக்ஸார்சிஸ்ட்' அழைக்கப்படுகிறது. 1973-ல் 'தி எக்ஸார்சிஸ்ட்' திரைப்படம் வெளியானது. வில்லியம் பீட்டர் பிளாட்டியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.
படம் பார்த்து திரையரங்கில் வாந்தி எடுத்தனர்!
'தி எக்ஸார்சிஸ்ட்' திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. நாவலாசிரியர் வில்லியம் பீட்டர் பிளாட்டியே இந்தப் படத்திற்கு கதை எழுதியிருந்தார். அன்று அமெரிக்காவில் வெறும் 25 திரையரங்குகளில் வெளியானாலும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வெற்றிக்குப் பிறகு பல திரையரங்குகள் 'தி எக்ஸார்சிஸ்ட்' படத்தைத் திரையிட முன்வந்தன. படம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்றால், மக்கள் பயத்தில் திரையரங்கிலேயே வாந்தி எடுத்தனர்.
சில காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்ததால், திரையரங்குகளில் பார்வையாளர்களின் அலறல் வெளியே கேட்டது. 'தி எக்ஸார்சிஸ்ட்' பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய திரைப்பட விருதான ஆஸ்கரைப் பெற்ற முதல் மற்றும் ஒரே திகில் படம் இதுவாகும். தற்போது இந்தப் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம். சந்தா வைத்திருந்தாலும், இந்தப் படத்தைப் பார்க்கக் கூடுதல் பணம் செலுத்த வேண்டும்.