- Home
- Cinema
- Thangamayil Bold Decision : சரவணனை துளி கூட மதிக்காத மயில் – மாமனாரிடம் கெஞ்சி கூத்தாடி என்ன செய்தார்?
Thangamayil Bold Decision : சரவணனை துளி கூட மதிக்காத மயில் – மாமனாரிடம் கெஞ்சி கூத்தாடி என்ன செய்தார்?
Thangamayil Bold Decision : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 599ஆவது எபிசோடில் தங்கமயில் கடைக்கு வேலைக்கு வருவது பற்றி அவரது மாமனாரிடம் கெஞ்சி கடையில் சம்மதமும் வாங்கிவிட்டார். அதைப் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் நடத்தி வரும் கடையை அப்பாவும், மகளும் சேர்ந்து கொண்டு ஆட்டைய போடும் பிளானுக்கு தங்கமயிலும் அவரது குடும்பத்தினரும் வந்துவிட்டார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஏற்கனவே தங்கமயிலின் அம்மா பாக்கியம் எப்போதும் கடை உங்களுக்கு தான் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதற்கு காரணம், செந்தில் அரசு வேலைக்கு சென்றுவிட்டார். கதிர் சொந்தமாக டிராவல்ஸூம் வைத்துவிட்டார். இனி இருப்பது அரசி மற்றும் குழலி தான். அவர்களுக்கும் ஏதாவது கொடுத்துவிட்டால், கடைசியில் எஞ்சியிருப்பது உன்னுடைய புருஷன் தான். அப்படியே கடையை அவருக்கு எழுதி வாங்கிவிட வேண்டியது தான் என்று பேசிக் கொண்டனர்.
தங்கமயிலின் அப்பா மாணிக்கம்
இந்த சூழலில் தான் தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கடைக்கு வந்து முதல் நாளில் கல்லாவில் உட்கார்ந்தார், ரூ.500 எடுத்ததோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை அள்ளிக் கொண்டு சென்றார். இதைப் பற்றி சரவணன் தனது மனைவி தங்கமயிலிடம் கூறி சண்டையிட்டார். அதாவது, ஆரம்பத்திலேயே தனது மாமனார் மாணிக்கம் கடைக்கு வேலைக்கு வருவது சரவணனுக்கு பிடிக்காது. அப்படியிருக்கும் போது இப்போது கடையில் கல்லாவில் உட்கார்ந்தது, மளிகை சாமான்களை எடுத்துச் சென்றது என்று எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை.
ஆபரேஷன் தியேட்டரில் ரேவதி; பவர்கட் செய்த மாயா - கார்த்திகை தீபம் 2!
கல்லா பணத்தை எடுத்ததும் கூட சரவணனுக்கு தெரியவில்லை
மேலும், கல்லா பணத்தை எடுத்ததும் கூட சரவணனுக்கு தெரியவில்லை. அப்படி தெரியும்பட்சத்தில் குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 599ஆவது எபிசோடில் மீனாவும், ராஜியும் வேலை பார்க்கும் போது நீ மட்டும் ஏன் சும்மா இருக்க, நீயும் ஒரு வேலை பார்க்க வேண்டியது தானே என்று கோமதி கேட்ட நிலையில் அதனை அப்படியே உள்டாவாக தனது கணவர் சரவணனிடம் பத்த வச்சுள்ளார். அதாவது தன்னை தண்டச்சோறு சாப்பிடுவதாக உங்க அம்மா கூறுகிறார் என்று சரவணனிடம் போட்டு விட்டார்.
குடும்பத்த பாத்துக்குறேன்
ஆனால், அவர்தான் தெளிவானவராச்சே, தங்கமயில் சொல்வதை எப்படி நம்புவார், அந்த மாதிரி தான் கேட்டார்கள். ஏன் வேலைக்கு போகல என்றார்கள். குடும்பத்த பாத்துக்குறேன். அதான் வேலைக்கு போகல என்று தங்கமயில் நக்கலாக பதிலளிக்க அது சரவணனுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து, நீ படிச்சிருக்குற என்று தான் வீட்டிலுள்ளவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
12ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறேன்
அப்படி எங்க அம்மா சொன்னது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், நீங்க, என்னுடைய அம்மாவிடம் சென்று நான் காலேஜ் எல்லாம் படிக்கவில்லை. 12ஆம் வகுப்பு தான் படித்திருக்கிறேன். எங்க வீட்டில் என்னை ஏமாற்றி தான் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். அதனால் தான் வேலைக்கு போக முடியவில்லை என்று சொல்லிவிடு. பண்ணுறது எல்லாம் பித்தலாட்டம். இதில் என்னுடைய அம்மா வேலைக்கு போக சொன்னார்களாம். இவங்களுக்கு கோபம் வந்துடுச்சு என்றார்.
ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்! அன்வி யாருக்கு?
கடைக்கு வரக் கூடாது
தொடர்ந்து கடைக்கு வரக் கூடாது என்று உன்னுடைய அப்பாவிடம் சொல்லவில்லையா என்று கேட்க, சொல்லவில்லை என்றார். அதன் பின்னர் அப்பாவிற்கு போன் போட்டு தனது கணவர் சொன்ன எல்லா விஷயத்தை சொல்லிவிட்டார். ஆனால், பதிலுக்கு தங்கமயிலின் அப்பா எல்லாவற்றையும் பேசினார். இது நம்ம கடை, சேர் உட்காருவதற்கு நன்றாக இருந்தது, சம்பளத்தில் மளிகை சாமான்களுக்கு கழித்துக் கொள்ளலாம் என்று பேசினார்.
பாண்டியன் சம்மதம்
இந்த நிலையில் தான் தனது மாமனாரிடம் கடைக்கு வேலைக்கு வருவது பற்றி பேசினார். இதில் கோமதிக்கும், சரவணனுக்கும் உடன்பாடில்லாத நிலையில் கடைசியில் பாண்டியன் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அவருக்கும் இதில் துளி கூட உடன்பாடில்லை. இந்த சூழலில் தான் ஏற்கனவே தங்கமயிலின் அப்பா மாணிக்கம் கடையில் வேலை பார்க்கும் போது, இப்போது தங்கமயிலும் கடைக்கு வர இருக்கிறார். அதன் பின்னர் கடையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Kantara Chapter 1 First Review :காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ஓ இதுதான் படத்தோட ஹைலைட்ஸா?