MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Thalapathy Vijay Wife Sangeetha Net Worth : நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jul 06 2025, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு
Image Credit : our own

தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு

Thalapathy Vijay Wife Sangeetha Net Worth : தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நடிகராக நடிக்க தொடங்கி இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மாஸ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். என்னதான் சினிமா பின்னணியைக் கொண்டிருந்தாலும் தனது தனிப்பட்ட முயற்சி, திறமையின் மூலமாக உச்சநட்சத்திரமாக இன்று ஜொலித்து கொண்டிருக்கிறார். தனது சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளார். இதில் எத்தனையோ வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சங்கீதா விஜய் பிஸினஸ்
Image Credit : our own

சங்கீதா விஜய் பிஸினஸ்

ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை இவர் கொண்டுள்ளார். அப்பா இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டிய விஜய், பின்னர் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக மாறினார். வெற்றிகரமான ஹீரோவாக சுமார் 33 வருடங்களுக்கு மேல் நடித்து வரும் விஜய் தற்போது 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜயின் 69-ஆவது படமாக உருவாகும் இந்த படம் தான் இவரின் கடைசி படம் என்பதை அவரே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

38
தமிழக வெற்றிக் கழகம் - விஜய் அரசியல் கட்சி
Image Credit : our own

தமிழக வெற்றிக் கழகம் - விஜய் அரசியல் கட்சி

இதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய்யின் அரசியல் வருகை தான். தமிழக மக்களின் நலன் கருதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இன்று மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். வரும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலில் களமிறங்கிய நிலையில், சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறி தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

48
தளபதி விஜய்
Image Credit : our own

தளபதி விஜய்

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்யின் அரசியல் வருகைக்கான படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் மேனன், நரைன், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், ரேவதி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் ரூ.300 கோடியில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

58
சங்கீதா விஜய்
Image Credit : our own

சங்கீதா விஜய்

200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு, சுமார் 400 முதல் 600 கோடி குறிக்கும் என்பது ஏற்கனவே தெரிய வந்திருந்தாலும், தற்போது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். விஜய் மற்றும் சங்கீதாவுக்கு திருமணமாகி 23 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

68
சங்கீதா விஜய் நிகர சொத்து மதிப்பு
Image Credit : google

சங்கீதா விஜய் நிகர சொத்து மதிப்பு

விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வுகளில் அவருக்குப் பதிலாக அவரது மனைவி சங்கீதா தான் கலந்து கொண்டு வருகிறார். கட்சி தொடங்குவதற்கு முன் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே சங்கீதா கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு சங்கீதாவை வெளியில் பார்க்கவே முடியாது.

78
விஜய் மனைவி சங்கீதா நிகர சொத்து மதிப்பு
Image Credit : our own

விஜய் மனைவி சங்கீதா நிகர சொத்து மதிப்பு

இந்த நிலையில் தான் சங்கீதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சங்கீதாவின் சொத்து மதிப்பு ரூ.400 கோடி இருப்பதாக இந்தியா.காம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் என்னென்ன வேலைகள் செய்கிறார் என்ற விவரங்கள் ஏதும் இல்லை. அவரது தந்தை லண்டனில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

88
தளபதி விஜய் கார் கலெக்‌ஷன்
Image Credit : our own

தளபதி விஜய் கார் கலெக்‌ஷன்

கார் பிரியரான விஜய் ஆடி, பிஎம்டபிள்யூ. லெக்சஸ் உள்பட பல ஆடம்பரமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் ஆடம்பரமான சொகுசு வீடு இருக்கும் நிலையில் திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை, வண்டலூர் ஆகிய இடங்களில் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
ஜன நாயகன்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved