MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Varisu movie : ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் ‘வாரிசு’... செம்ம குஷியில் தயாரிப்பாளர்

Varisu movie : ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் ‘வாரிசு’... செம்ம குஷியில் தயாரிப்பாளர்

Varisu movie update : வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, குஷ்பு, சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் வாரிசு படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2022, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். வம்சி இயக்கும் இப்படத்தில் சரத்குமார், குஷ்பு, ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

24

இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விஜய்யுடன் அவர் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை ஆகும். தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... வீரா முதல் மாவீரன் வரை... ரிப்பீட் செய்யப்பட்ட ரஜினியின் கிளாசிக் ஹிட் பட தலைப்புகளின் முழு லிஸ்ட் இதோ

34

வாரிசு படத்தின் போஸ்டர்கள் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டன. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், இதன் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

44

அதன்படி வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதன் சாட்டிலைட் உரிமை ரூ.65 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் ரிலீசுக்கு முன்பே வாரிசு படம் அதன் மொத்த பட்ஜெட்டையும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவும் படு குஷியில் உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சியை வாரி இறைக்கும் ‘வாரிசு’ நடிகை... விருது விழாவிற்கு ரெட் ஹாட் உடையில் வந்து அதகளப்படுத்திய ராஷ்மிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved