MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jason Sanjay : சிக்மாவுக்கு விழுந்த அடி... ரூட்டை மாற்றும் ஜேசன் சஞ்சய்! ஹீரோவாக நடிக்க விஜய் மகனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Jason Sanjay : சிக்மாவுக்கு விழுந்த அடி... ரூட்டை மாற்றும் ஜேசன் சஞ்சய்! ஹீரோவாக நடிக்க விஜய் மகனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Jason Sanjay Salary : முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நிலையில், விரைவில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளாராம். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 09 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jason Sanjay Hero Debut
Image Credit : FaceBook

Jason Sanjay Hero Debut

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இப்போ மறுபடியும் செய்திகள்ல அடிபடுறார். அப்பாவைப் போலவே சினிமாவுல தனக்கான ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்பட்ட சஞ்சய், முதல் முயற்சியாக டைரக்டராகத் தான் களமிறங்கினார். ஆனா, அவர் இயக்கிய முதல் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால, இப்போ புது ரூட்ல பயணிக்க ரெடியாகிட்டார். இந்த முறை டைரக்டர் சீட்டை விட்டுட்டு, ஹீரோவாக கேமரா முன்னாடி வரப்போறார்ங்கிற செய்தி சினிமா வட்டாரத்துல பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
‘சிக்மா’ தோல்விக்குப் பிறகு புது அவதாரத்தில் ஜேசன்!
Image Credit : Asianet News

‘சிக்மா’ தோல்விக்குப் பிறகு புது அவதாரத்தில் ஜேசன்!

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் டைரக்டராக அறிமுகமான படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிச்ச இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிச்சிருந்தாங்க. தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகள்ல வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ்ல எதிர்பார்த்த வெற்றியைப் பெறல.

முதல் படத்தோட ரிசல்ட் சரியில்லைன்னாலும், ஜேசன் சஞ்சய் சினிமாவை விட்டு விலகுற ஐடியால இல்லை. அதுக்கு பதிலா, இப்போ நடிப்புல தன்னோட அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்க்க முடிவெடுத்துருக்கார். இந்த புது ப்ராஜெக்ட்டுக்கும் லைகா நிறுவனம் தான் சப்போர்ட் பண்றதா சொல்லப்படுது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

35
முதல் படத்துக்கே 35 கோடி ரூபாய் பட்ஜெட்டா?
Image Credit : Asianet News

முதல் படத்துக்கே 35 கோடி ரூபாய் பட்ஜெட்டா?

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப்போற புதுப் படத்தைப் பத்தி இப்போவே பல சுவாரஸ்யமான தகவல்கள் உலா வருது. ரிப்போர்ட்டுகள் படி, இந்தப் படத்துக்காக சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியிருக்காங்களாம். அதுமட்டுமில்லாம, முதல் முறையா ஹீரோவாக நடிக்கிற ஜேசனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிற தகவல் எல்லாரையும் ஆச்சரியப்பட வெச்சிருக்கு.

ஆனா, இந்த பட்ஜெட் மற்றும் சம்பளம் பத்தி தயாரிப்பு நிறுவனம் தரப்புல இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரல. அதனால, இப்போதைக்கு இதையெல்லாம் சினிமா வட்டாரத்துல அடிபடுற தகவலா தான் எடுத்துக்க வேண்டியிருக்கு.

இந்தப் புதுப் படத்துக்கு சரியான டைரக்டரைத் தேடுற வேலையும் தீவிரமா நடந்துட்டு வருது. படக்குழு, பிரபல இயக்குநர் லிங்குசாமி உட்பட பல இயக்குநர்கள்கிட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டு வர்றதா கோலிவுட்ல பேசிக்கிறாங்க. ‘சிக்மா’ படத்தோட எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் பெயரும் டைரக்டர் லிஸ்ட்ல அடிபடுது.

45
அப்பாவின் நிழலில் இருந்து வெளியே வருவது பெரிய சவால்!
Image Credit : Instagram

அப்பாவின் நிழலில் இருந்து வெளியே வருவது பெரிய சவால்!

ஜேசன் சஞ்சய்க்கு சினிமா ஒண்ணும் புதுசு கிடையாது. ஏன்னா, அவரோட அப்பா தளபதி விஜய் தென்னிந்தியாவோட உச்ச நட்சத்திரங்கள்ல ஒருத்தர். விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டுல மட்டுமில்லாம, இந்தியா முழுக்கவே பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில இருந்து வர்ற ஜேசன் மேல இயல்பாகவே எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கும்.

ஆனா, ஜேசன் தன்னோட அப்பாவோட புகழை மட்டும் நம்பியிருக்காம, சொந்தத் திறமையால முன்னுக்கு வரணும்னு நினைக்கிறாராம். டைரக்டராக முதல் முயற்சியில எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கலைன்னாலும், நடிகராக ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பு அவர் முன்னாடி இருக்கு.

இருந்தாலும், ஹீரோவாக முதல் படம் ரிலீஸ் ஆகும்போது, ரசிகர்கள் கண்டிப்பா விஜய்யோட ஆக்டிங்கோட ஜேசனை ஒப்பிட்டுப் பார்ப்பாங்க. அப்பாவோட புகழுக்கு நடுவுல, தனக்கான ஒரு தனி நடிப்பு ஸ்டைலை உருவாக்குறது அவருக்கு ஒரு பெரிய சவாலா தான் இருக்கும்.

55
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
Image Credit : X

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

ஜேசன் சஞ்சய்யோட புதுப் படம் என்ன மாதிரியான கதையா இருக்கும்? அவருக்கு ஜோடியா யார் நடிக்கப் போறாங்க? டைரக்டராக யாரை ஃபிக்ஸ் பண்ணுவாங்க? இப்படி பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கல. சீக்கிரமே இந்தப் படம் பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

மொத்தத்துல, டைரக்டராக முதல் அடியிலேயே சறுக்கிய ஜேசன் சஞ்சய், இப்போ ஹீரோவாக புது இன்னிங்ஸை ஆரம்பிக்க ரெடியாகிட்டார்ங்கிற செய்தி தான் இப்போ ஹாட் டாபிக். தளபதி விஜய்யோட மகன்ங்கிற அடையாளத்தைத் தாண்டி, சொந்தத் திறமையால ரசிகர்களோட மனசை அவர் வெல்வாரான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜேசன் சஞ்சய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image2
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Recommended image3
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Related Stories
Recommended image1
Sigma Review : இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா முழு விமர்சனம் இதோ
Recommended image2
அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved