MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெளிநாடுகளில் புக்கிங் ஆரம்பம்! மாஸ் காட்டும் வாரிசு... தடுமாறும் துணிவு - முன்பதிவு வசூல் நிலவரம் இதோ

வெளிநாடுகளில் புக்கிங் ஆரம்பம்! மாஸ் காட்டும் வாரிசு... தடுமாறும் துணிவு - முன்பதிவு வசூல் நிலவரம் இதோ

இங்கிலாந்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 15 2022, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் - விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எப்போதுமே எலியும், பூனையுமாக தான் இருந்து வருகிறார். இதன்காரணமாகவே இவர்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படுவதில்லை. ஆனால் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் - அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கடந்த 9 ஆண்டுகளாக இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் ரிலீசாகாமல் இருந்து வந்தன. இந்நிலையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன. இதனால் யார் படம் வெற்றிபெறப்போகிறது, வசூலை வாரிக் குவிக்க போகிறது என்கிற பேச்சு தற்போதிலிருந்தே எழத்தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... காவி சர்ச்சையால் பதான் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம்... ஷாருக்கானின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு

34

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்களுக்கு சம்மான அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிநாட்டை பொறுத்தவரை விஜய்யின் வாரிசு படம் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது வெளிநாட்டில் ஆரம்பமாகி உள்ள முன்பதிவில் வாரிசு திரைப்படம் தான் அதிகளவு வசூல் செய்துள்ளது.

44

இங்கிலாந்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. அதன்படி வாரிசு படத்துக்கு அதிகளவிலான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை வாரிசு படம் முன்பதிவு மூலம் ரூ.12.25 லட்சம் வசூலித்து உள்ளதாகவும், துணிவு படம் வெறும் ரூ.2.95 லட்சம் மட்டுமே வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ரீ-ரிலீஸிலும் படுதோல்வி... பாபா படத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் - கடுப்பான ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார்டு பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்... அதில் இருந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
Recommended image3
Arjun Das : ரகசியமாக நடைபெற உள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் திருமண நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved