MalayalamEnglishKannadaTeluguTamilBanglaHindiMarathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • KEA 2025
  • Home
  • Cinema
  • விஜய் vs அஜித்... யாரு மாஸ்? போட்டி போட்டு வெளியான வாரிசு & துணிவு பட போஸ்டர்களால் முட்டிக்கொண்ட ரசிகர்கள்

விஜய் vs அஜித்... யாரு மாஸ்? போட்டி போட்டு வெளியான வாரிசு & துணிவு பட போஸ்டர்களால் முட்டிக்கொண்ட ரசிகர்கள்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படக்குழு திடீரென போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு உள்ளனர்.

Ganesh A | Published : Nov 30 2022, 03:10 PM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Asianet Image

தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளன. 9 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எகிறத் தொடங்கி உள்ளது.

24
Asianet Image

இதில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். அதேபோல் அஜித்தின் துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி இருக்கிறார். இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்கள் சரி சமமாக ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் விஜய்யின் வாரிசு படம் மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் துணிவு படக்குழு அதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... தோல்விக்கு பின்னும் தொடரும் லைகர் பட பஞ்சாயத்து... அமலாக்கத்துறை விசாரணைக்கு விஜய் தேவரகொண்டா ஆஜர்

34
Asianet Image

இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படக்குழு திடீரென போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு உள்ளனர். நேற்று துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதில் பொங்கல் ரிலீஸ் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அதற்கு போட்டியாக வாரிசு படக்குழுவும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

44
Asianet Image

வாரிசு படக்குழு வெளியிட்ட போஸ்டரில் நடிகர் விஜய் கையில் டீ கிளாஸ் உடன் கார் மீது கெத்தாக அமர்திருக்கும் படியான புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதனையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் இந்த இரு போஸ்டர்களில் எந்த படத்தின் போஸ்டர் மாஸாக இருக்கிறது என கேட்டு டுவிட்டரில் சண்டையிட்டுக் கொண்டனர். இதைப்பார்க்கும்போது போஸ்டருக்கே இப்படி சண்டை போட்டால், படம் ரிலீசன்று என்னென்ன கூத்து நடக்கப்போகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2-வில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? சர்ச்சைக்குரிய நடிகையை சந்திரமுகியாக்கும் பி.வாசு!

Ganesh A
About the Author
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். Read More...
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
Recommended Stories
Top Stories