ஜார்ஜியாவில் இருந்து வந்த மறுநாளே... மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்...!
ஜார்ஜியாவில் இருந்த திரும்பிய விஜய் சென்னை வந்த மறுநாளே அதாவது இன்று காலை மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் விவேக் கடந்த 16ம் தேதி மாராடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட போதும், 17ம் தேதி காலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சமூக சிந்தனையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்மைகளுடன் வலம் வந்த விவேக் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவேக் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரிலும்,சோசியல் மீடியா மூலமாகவும் தங்களுடைய இரங்கலை பதிவு செய்தனர்.
விவேக் மரணத்தின் போது நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 பட ஷூட்டிங்கில் இருந்தார். எனவே அவர் விவேக்கிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விஜய்யின் அம்மா ஷோபா நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜய் தளபதி 65 பட ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பினார். இது சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியன சோசியல் மீடியாவில் வைரலாகின.
ஜார்ஜியாவில் இருந்த திரும்பிய விஜய் சென்னை வந்த மறுநாளே அதாவது இன்று காலை மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஷாஜகான், உதயா, யூத், பத்ரி, ஆதி, நேருக்கு நேர், திருமலை, பிரியமானவளே, குஷி, குருவி, தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இருவரும் ஒன்றாக 2019ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.