50% ஆக்குபன்சியிலும் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா?
மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகும் நிலையில் ஒட்டுமொத்த வசூல் குறித்து வெளியாகியுள்ள சாதனை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஆனால் முதல் மூன்று நாட்களிலேயே வசூலில் தட்டித்தூக்கிய மாஸ்டர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ரிலீஸ் ஆன அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.
கடந்த வார இறுதி நிலவரப்படி “மாஸ்டர்” திரைப்படம் தான் உலக அளவில் முதலிடத்தில் கலெக்ஷன் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படங்களை வசூலில் மாஸ்டர் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகும் நிலையில் ஒட்டுமொத்த வசூல் குறித்து வெளியாகியுள்ள சாதனை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். ஓட்டுமொத்தமாக உலக அளவில் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.