MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போஸ்டருடன் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ; அரசியல் பிரச்சார பிளானா?

போஸ்டருடன் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ; அரசியல் பிரச்சார பிளானா?

Jana Nayagan Release Date : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Mar 24 2025, 06:53 PM IST| Updated : Mar 24 2025, 06:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Jana Nayagan Release Date Confirmation : தளபதி விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அஜித்தின் மாஸ் இயக்குநரான எச் வினோத் இயக்கி வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது காட்சிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளது.

26
Thalapathy Vijays Jana Nayagan film update out

Thalapathy Vijays Jana Nayagan film update out

மேலும், பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், ஷ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, வரலட்சுமி சரத்குமார், டீஜே அருணாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது.

36
Jana Nayagan Release Date Announced, Jana Nayagan Movie Release Date

Jana Nayagan Release Date Announced, Jana Nayagan Movie Release Date

இந்த நிலையில் தான் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒன்று பொங்கல் அல்லது தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகும். அப்படிதான் அஜித்தின் விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதாக கூறப்பட்டு பின்னர் ஜகா வாங்கி கடைசியில் பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

46
Jana Nayagan Release Date, Jana Nayagan Movie Update

Jana Nayagan Release Date, Jana Nayagan Movie Update

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் இனிமேல் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கடைசி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

56
Jana Nayagan Tamil Movie Release Date

Jana Nayagan Tamil Movie Release Date

தனது அரசியல் பயண பிரச்சாரத்திற்கு ஏற்ற வகையிலும் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் மறைமுகமாக தழிழக அரசியலை சாடுவது போன்ற உள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து அதன் மூலமாக தனது அரசியல் கதையை மக்களிடையே கொண்டு செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

66
Jana Nayagan Film Release Date, Jana Nayagan 2025 Release Date

Jana Nayagan Film Release Date, Jana Nayagan 2025 Release Date

இந்த நிலையில் தான் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை விஜய்யின் போஸ்டர் உடன் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை விஜய்யின் போஸ்டர் உடன் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இந்தப் போஸ்டரை பார்க்கும் போது ஏதோ பாடலுக்கான பாட்டாக தெரிகிறது.

 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜன நாயகன்
தளபதி விஜய்
மமிதா பைஜு
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமா
சினிமா
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
ஜனநாயகன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved