ஒரே வருடத்தில் 900 கோடி வசூல் அள்ளிய ஒரே ஒரு தமிழ் ஹீரோ; யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் கிங்?
தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது எட்டாக் கனியாக இருந்தாலும் ஒரே வருடத்தில் 900 கோடி வசூல் அள்ளிய தமிழ் ஹீரோ பற்றி பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்
1000 கோடி வசூல் என்பது பாலிவுட் மற்றும் டோலிவுட்டுக்கு அசால்டான விஷயமாக மாறிவிட்டது. ஆனால் கோலிவுட்டுக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இங்கு பல திறமை வாய்ந்த நடிகர்கள் இருந்தும் அந்த வசூலை இன்னும் எட்டமுடியவில்லை. மற்ற மொழி நடிகர்களை போல் இங்குள்ள நடிகர் புரமோஷனின் முழுவீச்சில் இறங்காததும் ஒரு முக்கிய காரணம். படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாட்டை தாண்டி வரமாட்டோம் என சிலரும், புரமோஷனுக்கே வரமாட்டேன் என சிலரும் முரண்டு பிடித்து வருகிறார்கள்.
தளபதி விஜய் படைத்த சாதனை
அப்படி இருக்கையில் கோலிவுட்டில் அதிகபட்சமாக ஒரே வருடத்தில் ரூ.900 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்த ஹீரோ ஒருவரைப்பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் விஜய் நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இந்த சாதனையை ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்கள் இதுவரை படைத்ததில்லை.
இதையும் படியுங்கள்... விஜய் கட்சியில் உருவாகும் 28 அணிகள்! குழந்தைகள் முதல் திருநங்கைகள் வரை லிஸ்ட் ரெடி!
ஒரே வருடத்தில் அதிக வசூல் அள்ளிய ஒரே தமிழ் நடிகர் விஜய்
கடந்த 2023-ம் ஆண்டு தான் தளபதி விஜய் இந்த சாதனையை படைத்தார். அந்த ஆண்டு அவர் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இதில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. பக்கா கமர்ஷியல் படமாக ரிலீஸ் ஆன இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.310 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த லியோ திரைப்படம் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது.
900 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோ
பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன லியோ பாக்ஸ் ஆபிஸில் ரூ.620 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமும் இதுதான். 2023-ம் ஆண்டில் விஜய் நடித்த இந்த இரண்டு படங்களின் மொத்த வசூல் ரூ.900 கோடியாகும். இதற்கு முன் 2018-ம் ஆண்டு 2.0 திரைப்படம் 800 கோடி வசூலித்ததன் மூலம் ஒரே ஆண்டில் அதிக வசூல் செய்த நடிகராக ரஜினிகாந்த் இருந்து வந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வருகிறார் விஜய்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்; வாரிசு நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!