MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "தலைவர்" பட மொத்த வசூல்.. 3 மடங்காய் முதல் நாளிலே அள்ளிய தளபதி - GOAT செய்த செய்கை!

"தலைவர்" பட மொத்த வசூல்.. 3 மடங்காய் முதல் நாளிலே அள்ளிய தளபதி - GOAT செய்த செய்கை!

GOAT Day 1Collection : நேற்று செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் வெளியாகி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம்.

2 Min read
Ansgar R
Published : Sep 06 2024, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GOAT Movie Review

GOAT Movie Review

தளபதி விஜய் நடிப்பில் நேற்று செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி இப்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம். முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜயை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். சிவகார்த்திகேயன் முதல் தோனி வரை பலரது கேமியோ பர்பாமன்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய சினிமாவின் டாப் 10 பணக்கார ஹீரோஸ்; 5,400 கோடிக்கு அதிபதியாக முதலிடத்தில் இருப்பது யார் தெரியமா?

24
Director Venkat prabhu

Director Venkat prabhu

இயல்பாகவே கமர்சியல் ரீதியான படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் வெங்கட் பிரபு. ஏற்கனவே சென்னை 28, கோவா, மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து அவர், முதல் முறையாக தளபதி விஜயை வைத்து இந்த கோட் திரைப்படத்தை இயக்கி, அதை வெற்றி படமாக மாற்றியுள்ளார். விரைவில் அரசியலில் தளபதி விஜய் களமிறங்க உள்ள நிலையில், தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, ஒரு கமர்சியல் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு மற்றும் விஜயின் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு என்றால் அது மிகையல்ல. 

34
GOAT Day 1 Collection

GOAT Day 1 Collection

நேற்று செப்டம்பர் 5ம் தேதி இந்த திரைப்படம் வெளியான நிலையில், உலக அளவில் தற்பொழுது GOAT, 126.32 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூலிலேயே 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது தளபதியின் கோட் திரைப்படம். இதனால் வெகு விரைவில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடிக்கும் என்கின்ற நம்பிக்கை படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

44
Lal Salaam

Lal Salaam

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வெளியான அவருடைய "லால் சலாம்" திரைப்படம் சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 36 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய பிளாப் திரைப்படமாக மாறியது. சூப்பர் ஸ்டார் ஒரு Extended Cameo கதாபாத்திரத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் அந்த திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் அதைவிட இப்போது மூன்று மடங்கு, உலக அளவில் முதல் நாளிலேயே வசூல் செய்து, மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறி வருகிறது தளபதி விஜயின் கோட்.

"குட்டி தல.. சின்ன தளபதி.. இதெல்லாம் நடக்காத கனவு" கோட் பட வசனத்தால் SKவை வச்சு செய்யும் பிரபலம்!

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
யுவன் சங்கர் ராஜா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved