தமிழகத்தில் மட்டும் 100 கோடி.. ஜெயிலரை ஓரம்கட்டிய தளபதி - வசூல் வேட்டை நடத்தும் GOAT!
GOAT Box Office : தளபதி விஜயின் The Greatest of All Time திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.
The Greatest of all time
தளபதி விஜயின் "கோட்" திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி இப்போது தனது நான்காவது நாளில் பயணித்து வருகிறது. முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து அசத்தியிருக்கிறார். இதற்கு முன்னதாக பெரிய அளவில் தளபதி விஜய் நெகட்டிவ் Shade உள்ள கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் நடிக்க வைத்து அசத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு என்றே கூறலாம். உலக அளவில் முதல் நாளிலேயே சுமார் 126.23 கோடிகள் வசூல் செய்து மெகா ஹிட் வெற்றி திரைப்படமாக மாறியது "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீ டூ முதல்.. போதை பஞ்சாயத்து வரை - நடிகர் விநாயகன் கிளப்பிய டாப் 4 சர்ச்சைகள்!
GOAT Movie
தமிழ் சினிமாவை பொறுத்தவரை டி ஏஜிங் டெக்னாலஜி கடந்த சில வருடங்களாகவே ஒரு சில திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தளபதியின் இந்த கோட் திரைப்படத்தில் படம் முழுக்க பல இடங்களில் தளபதி விஜய்க்கு இந்த டி ஏஞ்சின் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளதும், மறைந்த பாடகி பாவதாரணியின் குரல் இப்படத்தில் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் ரசிகர்கள் மத்தியிலும், திரை துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளது கோட் திரைப்படத்தின் கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.
Vijay movie
விரைவில் தனது அரசியல் பயணத்தை முழுமூச்சாக செயல்படுத்த உள்ள நடிகர் விஜயின் நடிப்பில் இன்னும் ஒரே ஒரு திரைப்படம் தான் வெளியாக உள்ளது என்று நினைக்கும் போது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோக அலைகள் எழுந்து வருகிறது. பல பேட்டிகளில் கூட வெங்கட் பிரபு ஒரே ஒரு விஷயத்தை தான் குறிப்பிட்டு பேசினார். அதாவது இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு நம்முடைய பிரியாவிடையை ஆத்மார்த்தமாக கொடுக்கும் ஒரு திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல நுணுக்கமான விஷயங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தினோம்.
ஜூன் அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கோட் திரைப்படம் வெளியாக வேண்டும் என்று தான் தயாரிப்பு தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் பல புதிய தொழில்நுட்பங்கள் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றை சரிவர மேற்கொள்ள தங்களுக்கு மேலும் சில காலம் தேவைப்படும் என்று கூறி, அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டு தான் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரைப்படம் வெளியானது என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.
GOAT Box office
விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் கோட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை தொடர்ச்சியாக பெற்று வருகிறது. உலக அளவில் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வரும் கோட் திரைப்படம் இன்று நான்காம் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆகையால் இது ஏற்கனவே தளபதி நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் என்று இரண்டு திரைப்படத்தின் சாதனைகளையும் தற்போது முறியடித்திருக்கிறது என்றே கூறலாம்.
கோட்.. கேமியோவில் கலக்கிய த்ரிஷா - ஒரே ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?