- Home
- Cinema
- கோடி கோடியாய் வசூல் குவிக்கும் தலைவன் தலைவி படத்தின் 2 நாள் வசூல் – தியேட்டருக்கு படையெடுக்கும் குடும்ப ஆடியன்ஸ்!
கோடி கோடியாய் வசூல் குவிக்கும் தலைவன் தலைவி படத்தின் 2 நாள் வசூல் – தியேட்டருக்கு படையெடுக்கும் குடும்ப ஆடியன்ஸ்!
Thalaivan Thalaivii Box Office Collection Day 2 Report in Tamil : குடும்பக் கதையை மையப்படுத்தி வெளியான விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தலைவன் தலைவி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
Thalaivan Thalaivii Box Office Collection Day 2 Report in Tamil : குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜய் சேதுபதி. சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில் துணை நடிகராக நடித்து வந்தார். அதன் பிறகு தனது கடின உழைப்பு மற்றும் அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் மூலமாக விடாமுயற்சியை வைத்து இன்று சினிமாவின் உச்சத்திற்கு ஒட்டு மொத்த ரசிகர்கள் கொண்டாடும் ஒரு எளிமையான நடிகராக வலம் வந்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் மகாராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவில் மகாராஜா படம் கோடி கோடியாக வசூல் குவித்து விஜய் சேதுபதிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
நித்யா மேனன் தலைவன் தலைவி கலெக்ஷன்
இந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் வந்த இடங்கள் தெரியாமல் திரையரங்குகளை விட்டு வெளியேறின. இந்த நிலையில் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பக் கதையை மையப்படுத்திய படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதி தலைவன் தலைவி கலெக்ஷன்
சர்வ சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை மையப்படுத்திய படம். அதுவும், ஹோட்டல் வேலை செய்பவர்களின் கஷ்டங்கள், அவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்று விஜய் சேதுபதி தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்படி என்ன படம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்தப் படம் தான் தலைவன் தலைவி. குடும்பத்தில் தலைவன் தலைவி யார் என்றால் உடனே அப்பா அம்மாவை சொல்லிவிடுவோம்.
தலைவன் தலைவி 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அது போன்று தான் படத்தில் தலைவன் தலைவி யார் என்றால் அது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் தான். ஆம், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த மூவர் கூட்டணியில் கடந்த 25ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தலைவன் தலைவி. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்த படம் முதல் நாளில் ரூ.4.50 கோடி வசூல் குவித்திருந்ததாக சாக்னிக் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 2ஆவது நாளில் எத்தனையோ கோடி வசூல் குவித்திருக்கிறது என்று தொடர்ந்து பார்க்கலாம்.
பாண்டிராஜ், விஜய் சேதுபதி, நித்யா மேனன் - தலைவன் தலைவி
தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து காளி வெங்கட், ஆர் கே சுரேஷ், சரவணன், தீபா சங்கர், அருள்தாஸ், சென்றாயன், மைனா நந்தினி, ரோஷினி ஹரிப்ரியா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தலைவன் தலைவி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில் தான் படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் தலைவன் தலைவி படத்தின் வசூல் முதல் நாளை விட மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, 2ஆவது நாளில் மட்டும் ரூ.6.75 கோடி வசூல் குவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக தலைவன் தலைவி படம் 2 நாட்களில் மட்டும் ரூ.11.25 கோடி வசூல் குவித்துள்ளது. இன்று வார விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.