MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

ஒருவர் தங்களில் வாழ்க்கையில் எத்தனையோ தீபாவளியை கடந்து சென்றாலும், திருமணமான முதல் வருடம் கொண்டாடப்படும், தலை தீபாவளி ரொம்ப ஸ்பெஷல். அப்படி இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்கள் பற்றி பார்க்கலாம். 

4 Min read
manimegalai a
Published : Oct 26 2024, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Ashwanth And Kanmani Manoharan

Ashwanth And Kanmani Manoharan

சன் டிவியில், வணக்கம் தமிழா நிகழ்ச்சி உட்பட ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளர் அஸ்வந்த்.  இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை கண்மணி மனோகரனுக்கும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
 

211
Avinash - Tresa Mariya

Avinash - Tresa Mariya

சன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' சீரியல் மூலம் அறிமுகமான நடிகரும், டான்சருக்கான அவினாஷ் பள்ளி காலத்தில் இருந்தே, காதலித்து வந்த தன்னுடைய நீண்ட நாள் காதலியான தெரேசா மரியா என்பவரை செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது. தற்போது அவினாஷ் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிற தொடரில் நடித்து வருகிறார். இவருடைய தங்கை அக்ஷிதா 'பாக்கியலட்சுமி' சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவினாஷ் - தெரேசா மரியா ஜோடி இந்த ஆண்டு தங்களின் தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

சீரியல் நடிகையிடம் 50 சவரன் நகையை ஆட்டையை போட்டுவிட்டு திருமணத்தை நிறுத்திய பைலட் மாப்பிள்ளை!

311
Srithika And SSR Aaryann

Srithika And SSR Aaryann

'வெண்ணிலா கபடி குழு', 'வேங்கை' போன்ற திரைப்படங்களிலும், நாதஸ்வரம், உயிர், மகராசி, போன்ற சுமார் 10-க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரித்திகா. இவர் தன்னுடன் 'மகராசி' சீரியலில் இணைந்து நடித்த, எஸ் எஸ் ஆரியன் என்பவரை, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரித்திகா ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு, சனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்.. இருவரும் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதேபோல் எஸ் எஸ் ஆரியன் சீரியல் நடிகை நிவேதித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, விவாகரத்து பெற்றவர். இவர்கள் இருவரும் இந்தாண்டு மீண்டும் தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
 

411
Arjun Arumugam Wedding

Arjun Arumugam Wedding

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்னி C /O ராணி என்கிற சீரியலில் நடித்து வந்த நடிகர் அர்ஜூன் ஆறுமுகம், இந்தாண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த புதிய ஜோடியும், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா; வறுத்தெடுக்கப்பட்ட அர்னவ் - இறுதியில் என்ன ஆச்சு?

511
Prem Jacob, Swasika

Prem Jacob, Swasika

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'நீ நான் காதல்' சீரியலில் நடித்து வரும் பிரேம் ஜாக்கோப், கோரிப்பாளையம், சாட்டை, ரப்பர் பந்து, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாசிகா-வை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. இந்த நட்சத்திர ஜோடியும், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
 

611
viraat - Naveena

viraat - Naveena

'அன்பே வா' சீரியலில் ஹீரோவாக நடித்த விராட்,  நவீனா என்கிற மேக்கப் ஆர்ட்ஸ்டை கடந்த ஏப்ரல் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணம் ஆகி, 15 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். தன்னுடைய நீண்ட கால காதலியான நவீனாவை தான் திருமணம் செய்ய வேண்டும் என, பல வருடங்கள் தன்னுடைய பெற்றோருடன் பேசாமல் இருந்து சம்மதம் பெற்ற பின்னரே... விராத் நவீனாவை கரம் பிடித்தார். இந்த ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை மகளுடன் கொண்டாட உள்ளனர்.

சொந்த அண்ணனிடம் உதவி கேட்டு அசிங்கப்பட்ட கண்ணதாசன்! திட்டி எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!
 

711
Dharshana Ashok - Abishek

Dharshana Ashok - Abishek

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நீ தானே என் பொன்வசந்தம்', 'கனா' ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷனா அசோகன். இவர் மருத்துவரும் கூட. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய காதலர் அபிஷேக் என்கிற மருத்துவரை, பெற்றோர் சம்மதத்துடன் தர்ஷனா திருமணம் செய்து கொண்டார். 

811

கண்மணி சீரியல் மூலம் அறிமுகமான சந்தியா, இதைத் தொடர்ந்து சுந்தரி நீயும் சுந்தரும் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு, ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்கிற தொடரில் நடித்து வருகிறார். வழக்கறிஞரான இவர், பிரபல நடன இயக்குனர் சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெற்றோர் முடிவு செய்த திருமணம் என்றாலும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் காதலித்து வருவதாக பல பேட்டிகளில் சந்தியா கூறியுள்ளார். இந்த கியூட் ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

விக்ராந்த் - ரித்விகா நடித்த தீபாவளி போனஸ்; ரசிகர்கள் மனதை கவர்த்ததா? திரைப்பட விமர்சனம்!

911
Aravish - Harika

Aravish - Harika

சுந்தரி மற்றும் இலக்கியா சீரியல்களில் நடித்து வரும் அரவிஷ் மற்றும் திருமகள் சீரியல் நடிகை ஹரிகா சாதுவுக்கும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் ஹரிக்காவின் பிறந்தநாளை கோலாகலமாக அரவிஷ் கொண்டாடினார். இந்த நட்சத்திர ஜோடி இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

1011
Surendher - Nivedhitha

Surendher - Nivedhitha

 திருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்த சுரேந்தர், அதே சீரியலில் வில்லியாக நடித்த நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் நிவேதிதா கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் சேர்ந்து அறிவித்தனர். தற்போது நிவேதிதா சீரியலில் இருந்து விலகி இருந்தாலும், சுரேந்தர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடரில் நடித்து வருகிறார். சுரேந்தருக்கு இது முதல் திருமணம் என்றாலும், நிவேதிதா ஏற்கனவே பிரபல சீரியல் நடிகர் எஸ் எஸ் ஆர் ஆரியனை திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். எனவே இது இவருக்கும் இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை வயிற்றில் இருக்கும் குழந்தையோடு கொண்டாட உள்ளனர்.

கூலி நிலைமை என்ன? ஸ்ருதியின் அதிரடி செயலால் குழப்பத்தில் லோகேஷ் கனகராஜ்!

1111
Abishek Raja

Abishek Raja

தொகுப்பாளரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருபவருமான அபிஷேக், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு... அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தன்னுடைய நீண்ட நாள் தோழியான திவ்யா என்பவரை காதலித்து, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு தங்களுடைய தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved