லீக்கானது அஜித்தின் “வலிமை” குடும்ப போட்டோ... ட்விட்டரில் திருவிழாவை ஆரம்பித்த தல ஃபேன்ஸ்...!

First Published Dec 31, 2020, 10:02 AM IST

தற்போது அஜித் அப்பா, அம்மா, பாட்டி என ஓட்டுமொத்த வலிமை குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு பூஜை போட்ட போது அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என சொல்லியதோடு சரி போனிகபூர் இன்று வரை எந்த அப்டேட் பற்றியும் வாய் திறக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பாகினர்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என முக்கியமான நாட்களிலாவது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கண்ணில் படுமா? என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்கள் “போனிகபூரை காணவில்லை” என ஊர் ழுழுக்க போஸ்டர் அடித்து ஒட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

2020 ஆண்டு முழுவதுமே வலிமை அப்டேட் கேட்டு விதவிதமாக ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட  #thalachangeyourpro என அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

அஜித் ரசிகர்களில் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பலனாக தல பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதை கொண்டாடும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் தல ரசிகர்கள் மாஸ் காட்டினர்.

அதன் பின்னர் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஹெச்.வினோத் ஆகியோர் புத்தாண்டு அன்று வலிமை படம் குறித்து வெயிட்டான அப்டேட் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ட்விட்டரில் #காத்திருக்கிறோம்தல என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

தற்போது அஜித் அப்பா, அம்மா, பாட்டி என ஓட்டுமொத்த வலிமை குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புகைப்படம் இல்லை என்றாலும், தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அந்த போட்டோவை வைரலாக்கியுள்ளனர். இந்த காரணத்தால் #Valimaiதிருவிழாஆரம்பம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?