வலிமை ஷூட்டிங்கில் மீண்டும் அஜித்துக்கு காயம்... ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை?
வலிமை படப்பிடிப்பில் பங்கேற்ற தல அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்தனர்.
அக்டோபர் 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமேஜி ராவ் ஸ்டியோவில் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் தல அஜித் செம்ம ஃபிட் அண்ட் எங் லுக்கில் பங்கேற்றார்.
ஐதராபாத்தில் தன்னை காண வந்த ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடைய கையில் இருந்த பெரிய தழும்பை பார்த்து ரசிகர்கள் கதி கலங்கி போயினர்.
அப்போது ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஸ்டேண்ட் காட்சிகளில் நடித்த அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 15ம் தேதி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஷெட்டியூல் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. எதற்காக ஒரு மாதம் தள்ளிவைக்கிறார்கள் என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் அஜித்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதனால் ஐதராபாத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் ஷூட்டிக்கை தள்ளிவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.