டெஸ்ட் முதல் கிங்ஸ்டன் வரை; ஏப்ரல் 4-ந் தேதி OTTயில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் ஓடிடியில் நயன்தாரா நடித்த டெஸ்ட் உள்பட என்னென்ன தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

April 4 OTT Release Tamil Movies : கொரோனாவுக்கு முன்பு வரை தியேட்டரில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆனால் அது டிவியில் ஒளிபரப்பாக பல மாதங்கள் ஆகும். அதனால் தியேட்டரில் படத்தை மிஸ் பண்ணிவிடக் கூடாது என ஆர்வத்துடன் மக்கள் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது ஓடிடி தளங்களின் ஆதிக்கத்தால், படத்தை தியேட்டரில் பார்க்க தவறினாலும் ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடும் அப்போ பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இதனால் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 4ந் தேதி என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
நயன்தாராவின் டெஸ்ட்
நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் இந்த வாரம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... "இந்தியாவே உங்கள நம்பி தான் இருக்கு" விறுவிறுப்பான கதைக்களத்தில் வெளியான 'Test ட்ரைலர்!
ஜிவி பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன்
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்த படம் கிங்ஸ்டன். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இப்படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ் தான் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். அவர் தயாரித்த முதல் படம் இதுவாகும். இப்படத்தில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வி எப் எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. தியேட்டரில் இப்படம் தோல்வியை தழுவினாலும் ஓடிடியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 4ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் கிங்ஸ்டன் ரிலீஸ் ஆக உள்ளது.
லெக் பீஸ்
மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லெக் பீஸ். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருந்தது. இப்படம் தியேட்டரில் சொதப்பிய நிலையில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் வரவேற்பை பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... அட்டர் பிளாப் ஆன ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன்; பட்ஜெட் 20 கோடி.. ஆனா வசூல் இவ்வளவுதானா?