குட் பேட் அக்லிக்கு ஆப்பு வைக்க இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

This Week Theatre Release Tamil Movies : தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் டிராகன் படம் மட்டுமே 150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் இணைந்தது. அப்படம் கடந்த ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்து சக்கைப்போடு போட்டு வருகிறது. ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டது அப்படம். இந்நிலையில், குட் பேட் அக்லிக்கு போட்டியாக இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
Sachein Re Release
சச்சின் ரீ-ரிலீஸ்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட சச்சின் திரைப்படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடித்த கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சச்சின் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டும் 200க்கும் அதிகமான திரையரங்குகள் வெளியாக உள்ளது.
இதையும் படியுங்கள்... விஜய் வீட்டு பெட்ரூமில் நடந்த சாங் ரெக்கார்டிங்; அடடே இந்த சூப்பர் ஹிட் பாட்டு தானா?
Ten Hours
டென் ஹார்ஸ்
சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள திரில்லர் திரைப்படம் தான் டென் ஹார்ஸ். இப்படத்தை இளையராஜா கலியபெருமாள் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிபிராஜ் போலீஸாக நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் இருந்து பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய இப்படம் வருகிற ஏப்ரல் 18ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
Odela 2
ஒடேலா 2
தமன்னா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது ஒடேலா 2. சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்படமான இதை அசோக் தேஜா இயக்கி உள்ளார். இப்படத்தில் தமன்னா உடன் யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 17ந் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டிய தமன்னா - வைரலாகும் ஒடேலா 2 டிரெய்லர்