MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரையரங்க உரிமையாளர்களுக்கு தலைவலியாக மாறிய வாரிசு - துணிவு படங்கள்... சைலண்டாக பாயும் நடவடிக்கை

திரையரங்க உரிமையாளர்களுக்கு தலைவலியாக மாறிய வாரிசு - துணிவு படங்கள்... சைலண்டாக பாயும் நடவடிக்கை

விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அதுவே திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 19 2023, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இந்த இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்த இரண்டு படங்களும் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

24

வாரிசு, துணிவு படங்கள் கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான போது, துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக் காட்சியும், வாரிசு படத்துக்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது. இவ்வாறு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட போது இருதரப்பு ரசிகர்களிடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் இந்த மோதல் எல்லைமீறி சென்றது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இருதரப்பு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டதால் அங்குள்ள பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. அதுமட்டுமின்றி அந்த தியேட்டரையும் அடித்து சேதப்படுத்தினர். இதையடுத்து நிலைமை எல்லைமீறி சென்றதால் தடியடி நடத்தி இருதரப்பு ரசிகர்களையும் போலீசார் விரட்டி அடித்த சம்பவங்களும் அரங்கேறின.

இதையும் படியுங்கள்... கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு... ரோட்டில் இருந்தே தரிசனம் செய்ய வற்புறுத்தியதாக புகார்

34

அதுமட்டுமின்றி இந்த கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி நடனமாடிக் கொண்டிருந்த பாரத் என்கிற அஜித் ரசிகர் ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவதை தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

44

இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அனுமதியின்றி அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாரிசு - துணிவு படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... கதிரவனை தொடர்ந்து... பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ஆஸ்கரில் புது வரலாறு படைத்த சிங்கப்பெண்... ‘சின்னர்ஸ்’ ஒளிப்பதிவாளர் ஆகபாவ்-வின் மெர்சல் சாதனை பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved